இந்த வீரருக்கு இந்திய ஓடிஐ அணியில் வாய்ப்பு அவ்வளவுதான் – வெளிப்படையாக கூறிய வீரேந்தர் சேவாக்

0
361
Virender Sehwag

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இத்தொடரில் புதுமுக வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார் . இந்திய அணியை பொறுத்த வரையில் 70 சதவீதம் புதுமுக மற்றும் அனுபவமற்ற வீரர்களே . 30 சதவீதம் மட்டும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர் . அதில் மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர் என்றால் மணீஷ் பாண்டே. இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருக்கும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே சில தொடர்களில் இவரை கழட்டிவிடப்பட்டுள்ளார் .

பொதுவாகவே இரண்டு தொடர்களுக்கு ஒருமுறை இடம்பெறும் இவருக்கு தற்போது இலங்கை தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைத்தது . மிடில் ஆர்டரில் ஏகப்பட்ட வீரர்கள் வெளியே காத்திருக்கின்றனர். நம்பர் 4-லில் விளையாட மட்டுமே ஒரு கிட்டதட்ட 10 மேற்ப்பட்ட வீரர்கள் வெளியே இருக்கிறார்கள். அந்த வீரர்களை வைத்தே ஒரு ப்ளேயிங் லெவன் உருவாக்கிடலாம் போல.

- Advertisement -

அத்தகைய சூழ்நிலையில் மணீஷ் பாண்டேவிற்க்கு மீண்டும் அணிக்குள் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இலங்கை தொடரை சொதப்பியுள்ள மணீஷ் பாண்டேவிற்க்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று இந்திய அணியின் முன்னால் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார் .

ஓடிஐ அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்

Manish Pandey ODI

“ இந்த தொடரில் அதிகம் பயனடைந்த வீரர் என்றால் அது மணீஷ் பாண்டே மட்டுமே. மூன்று போட்டிகளிலும் களமிறங்கி மூன்று போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் மூன்று போட்டிகளில் விளையாடிய இவர் 74 ரன்கள் மட்டுமே அடித்தார் . புதுமுக வீரர்கள் இஷான் கிஷன் , சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடும் இந்நேரத்தில் அனுபவம் வாய்ந்த முன்னனி வீரரிடம் இது போன்ற ஆட்டம் மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் இவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று கருதுகிறேன்.

- Advertisement -

அவரை போலவே ஹர்டிக் பாண்டியா இத்தொடரில் சொதப்பியுள்ளார் என்று கூற வேண்டும். முன்னனி வீரர்களை காட்டிலும் இளம் வீரர்கள் இத்தொடரில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்” என்று வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்

- Advertisement -