விராட்டுக்கு எல்லாம் தெரியும்.. கவாஸ்கர் இப்படி நியாயம் இல்லாமல் பேச வேண்டாம் – இளம் வயது பயிற்சியாளர் பேட்டி

0
246

விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா விராட் கோலி பேட்டிங் பற்றி கவாஸ்கர் செய்திருந்த விமர்சனத்திற்கு தற்போது பதில் அளித்து பேசி இருக்கிறார்.

விராட் கோலி ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருவது கவலை அளிப்பதாக இருக்கிறது. இது குறித்து கவாஸ்கர் விராட் கோலி இந்த விஷயத்தில் கவனமாக இருந்து அப்படியான சாட்டை விளையாடாமல் ரன்கள் அடிக்க வேண்டும் என கேட்டு இருந்தார்.

- Advertisement -

கவாஸ்கர் மற்றவர்களுக்கும் சொல்லட்டும்

இதுகுறித்து விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பேசும்பொழுது “சுனில் கவாஸ்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவருடைய பரிந்துரைகள் எப்பொழுதும் வரவேற்கப்படுகின்றன. ஆனால் அவர் மற்றவர்களுக்கும் அவர்களது பேட்டிங் பற்றி பரிந்துரை செய்வார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி 2008 ஆம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டிங் குறித்து கவாஸ்கர் பேசுவது நியாயம் அற்றது. இரண்டு இன்னிங்ஸ் சரியாக விளையாடாத அவர் இந்த தொடரில் ஒரு சதம் அடித்திருக்கிறார்”

“புள்ளி விபரங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் விராட் கோலி எந்த வகையான வீரர் என்பது பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். அவர் எதுவும் சொல்ல முடியாத விமர்சனம் செய்ய முடியாத மிகப்பெரிய சிறந்த வீரர் என்று எனக்கு தெரியும். இந்திய கிரிக்கெட்டில் மிகவும் நிலையாக ரன்கள் எடுக்கும் வீரர்”

- Advertisement -

விராட் கோலிக்கு தன் தவறு தெரியும்

மேலும் பேசி உள்ள ராஜ்குமார் சர்மா விராட் கோலியின் டெக்னிக் மற்றும் மனநிலையில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்து கூறும் பொழுது ” டெக்னிக் மற்றும் மனதில் அவருக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது. விராட் கோலி போதுமான அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவர். மேலும் அவர் விளையாட்டை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்”

இதையும் படிங்க : ஓய்வு பெறும் முடிவை அப்பதான் எடுத்தேன்.. இது எனக்கு கஷ்டம் இல்ல பெரிய நிம்மதி – அஸ்வின் சிறப்பு பேட்டி

“நாங்கள் சமீபத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம். நான் பொதுவெளியில் பகிர முடியாத சில விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டோம். அவர் போதுமான முதிர்ச்சி அடைந்து இருக்கின்ற வீரர். அவர் எங்கு தவறு செய்கிறார் என்று அவருக்குத் தெரியும். அவர் திரும்பி வருவார் அதையும் நீங்கள் இந்த தொடரிலேயே பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -