தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு களத்தில் விராட் கோலி பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறார்.
இன்று நடைபெறும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு எடுத்ததுமே பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
விராட் கோலி செய்த சம்பவம்
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆறாவது ஓவரிலேயே வரும் சக்கரவர்த்தியை கொண்டு வர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்தரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் வருண் சக்கரவர்த்தி ஓவரில் தவறவிட மேலும் அழுத்தம் அதிகரித்தது.
இந்த நேரத்தில் ஷமி ஏழாவது ஓவர் பந்து வீசும் பொழுது கையில் காயமடைந்தார். இதனால் போட்டி தடைபட விராட் கோலி நேராக ரோஹித் சர்மாவிடம் சென்று கள அமைப்பை எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்து எட்டாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி உள்ளே வர சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஓவரில் வில் யங் ஆட்டம் இழந்தார். விராட் கோலியின் தலையீடு பெரிய மாற்றத்தை ஆட்டத்தில் ஏற்படுத்தியது.
குல்தீப் போட்டியை மாற்றிய தருணம்
இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தாலும் அதிரடியாக விளையாடிய ரவீந்திரா இருந்த காரணத்தினால் அழுத்தம் இருந்தது. இந்த நிலையில் குள்தீப் யாதவ் உள்ளே வந்த உடனே முதல் பந்திலையே அவரை கிளீன் போல்ட் செய்ய இந்திய அணிக்கு அது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது.
இதையும் படிங்க : ரன் மழையில் நியூஸி.. குல்தீப் வைத்து ரோஹித் சர்மா மாஸ் பிளான்.. வியந்து பாராட்டிய தினேஷ் கார்த்திக்
இதனால் இரண்டு வலது கை பேட்மேன்கள் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் முக்கிய பவுலரான வருண் சக்கரவர்த்தியை தொடர வேண்டிய கட்டாயம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நீங்கியது. குல்தீப் யாதவ் இதோடு நிற்காமல் கேன் வில்லியம்சன் விக்கட்டையும் எடுக்க இந்திய அணிக்கு இருந்த பெரிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது.






