நாங்களும் மனிதர்கள் தான் – வைரலாகும் விராட் கோலியின் 9 வருட பழைய ட்வீட்

0
514
Virat Kohli Tweet

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி பிரிட்ஜ் மைதானத்தில் டிராவில் முடிந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல மற்றொரு துவக்க வீரர் கேஎல் ராகுல் சதம் கடந்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ராகுல்.

இந்திய அணிக்கு துவக்கம் சரியாக இருந்தாலும் மிடில் ஆடர் சற்று மோசமானதாகவே இந்த தொடரில் இருந்து வருகிறது. குறிப்பாக விராத் கோலி, புஜாரா, ரகானே போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. இந்த மூவரில் புஜாரா மற்றும் ரகானே இருவரும் இணைந்து நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர்.

- Advertisement -
Virat Kohli Test Cricket
Photo: BCCI

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்சை ஆடிய பிறகும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கோலியின் வீக்னஸாக கருதப்படும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முற்பட்டு தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வருடமாக விராட்கோலி இந்திய அணிக்காக சதம் எதுவும் அடிக்கவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த பத்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சராசரி முப்பது ரன்களுக்கும் குறைவாக உள்ளது.

இதன் காரணமாக ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார் கேப்டன் விராத் கோலி. என்னதான் ஒரு பக்கம் ரசிகர்கள் அவரை விமர்சித்து கொண்டிருந்தாலும் பலர் அவரின் பழைய ஆட்டங்களை நினைத்துப் பாருங்கள் என்று விராட் கோலிக்கு ஆதரவு நல்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் விராத் கோலி பதிவிட்ட பழைய டுவிட் ஒன்றை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். 2012ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று பதிவிட்ட அந்த ட்வீட்டில் அவர், “நாங்களும் மனிதர்கள் தான் அனைத்து நேரமும் சிறப்பாக செயல்பட நாங்கள் ஒன்றும் மிஷின்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் விமர்சிக்க மட்டுமே இங்கு இருப்பவர்கள் தயவுகூர்ந்து பின் தொடர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

- Advertisement -

விராட் கோலியின் ஆட்டம் இப்போது சிறப்பாக இல்லை என்றாலும் அவரை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது என்று கூறும் வண்ணமாக தற்போது அவரது ரசிகர்கள் இந்த ட்வீட்டை வைரலாக்கி வருகிறார்கள்.