ஐபிஎல் 2024

விராட் கோலி அதிர்ஷ்டசாலி.. ஆனா அவர் நேற்று செஞ்ச இந்த ஒரு விஷயத்தை கவனிச்சிங்களா? – ஹர்பஜன் சிங் விளக்கம்

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் விராட் கோலி 47 பந்தில் 92 ரன்கள் குவித்தார். அவருடைய அதிரடியான பேட்டி காரணமாக 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. நேற்று அவரை ஆட்டநாயகன் விருதும் பெற்றார். அவருடைய பேட்டிங் அணுகுமுறை நேற்று வித்தியாசமாக இருந்தது குறித்து ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி பவர் பிளேவுக்கு பிறகு சுழல் பந்துவீச்சில் தடுமாறுகிறார் என்றும், இதனால் மற்ற பேட்ஸ்மேன்கள் மீது ரன் அழுத்தம் உருவாகி அவர்கள் ஆட்டம் இழக்கிறார்கள் என்றும், அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் விராட் கோலி விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் விளையாடுகிறார்.

இது குறித்து ஹர்பஜன்சிங் பேசும் பொழுது “நேற்று விராட் கோலி மிகவும் அதிர்ஷ்டமானவராக இருந்தார். அவர்தான் ஏதும் இல்லாமல் இருந்த பொழுது கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் வீணடித்தது. இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தந்தால் என்ன நடக்கும்? என்று அவர் நேற்று காட்டினார். 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். உண்மையில் இது ஒரு அழிவுகரமான பேட்டிங்.

அவர் ஏற்கனவே ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறார். மேலும் இந்த சீசனில் அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சீசன்களை விட மிகவும் அருமையாக இருந்து வருகிறது. பவர் பிளேவுக்குப் பிறகு இன்டெண்டை எப்படி காப்பாற்றிய அதிரடியாக விளையாட முடியும்? என்பதை அவர் காட்டி எங்கள் இதயங்களை மகிழ்வித்தார்.

- Advertisement -

47 பந்தில் நீங்கள் 92 ரன்கள் எடுக்கும் பொழுது ஒரு பந்து இரண்டு ரன் வீதம் என்று எடுக்கிறீர்கள். இன்னொரு பக்கத்தில் பார்த்தால் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் போன்றவர்கள் ஒரு பந்துக்கு மூன்று அல்லது நான்கு ரன்கள் எடுக்கிறார்கள். நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒவ்வொரு பந்திலும் கிரிக்கெட் ஷாட்களை ஒன்றன்பின் ஒன்றாக ஆடிக் கொண்டே இருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்.. இம்பேக்ட் பிளேயர் விதி தொடருமா?.. அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜெய் ஷா

பந்து கொஞ்சம் பேட்டுக்கு வராத காரணத்தினால் அவர் தன்னுடைய கால்களை பயன்படுத்தினார். வேகம் குறைவாக இருக்கும் பொழுது அவர் முன்னோக்கி சென்று விளையாடினார். பின்னர் தன்னுடைய நிலையில் இருந்து ஸ்பின்னர்களுக்கு எதிராக பெரிய ஷாட்களை விளையாடினார். ஸ்லாக் ஸ்வீப் ஷாட்களை மூன்று அல்லது நான்கு முறை விளையாடி மிட் விக்கெட் பகுதியை அளந்தார். அவர் அந்த வகையான ஷாட்களில் சிக்ஸர்கள் அடிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

Published by