ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடிப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கணிப்பை வெளியிட்டுள்ளார். . பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 பந்துகளில் கோலி டக் அவுட்டானார்.
இதனால் இந்திய அணிக்கு திரும்பியதில் கோலி பெரும் தோல்வியைத் தழுவினார். இதனால் இந்திய அணி 3 போட்டிகள் தொடரில் 0-1 என பின்தங்கியது. இருப்பினும், கோலி ஆடிலெய்ட் ஓவலில் கோலி அபாரமான ரெக்கார்டை வைத்துள்ளார். அடிலெய்ட் ஓவலில் 12 போட்டிகளில் 500 ரன்கள் மேல் அடித்துள்ள கோலியின் சராசரி 65 என அளவில் உள்ளது.
விராட் கோலி சதம் அடிப்பார்:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிளார்க், “அடிலெய்ட் ஓவலில் எந்த ஃபார்மட்டிலும் விராட் கோலியின் ரெகார்ட் அபாரமானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் வந்து சதம் அடிக்காவிட்டால் ஆச்சரியமாக இருக்காது,” என்று கிளார்க் கூறினார். லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர் என்றும் கிளார்க் கணித்தார்.
குடும்ப விஷயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத ஜம்பா, அடிலெய்ட் போட்டியில் திரும்பி வர உள்ளார். இறுதியாக, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்யும் என தெரிவித்தார். “அவர்கள் தங்கள் டாப்-ஆர்டர் பேட்டிங்கை மாற்ற மாட்டார்கள். அந்த மூன்று பேட்ஸ்மேன்களும் பலமுறை தோல்வியடைய வாய்ப்பில்லை.”
குல்தீப் விளையாட வாய்ப்பு:
“பவுலிங்கில் ஒரு மாற்றம் செய்யலாம். அவர்களிடம் மூன்று ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள், அங்கு மாற்றம் செய்யலாம். டி20 கிரிக்கெட்டில், அத்தகைய ஆல்-ரவுண்டர்களை விரும்பியது. கீழே பயனுள்ள ரன்கள் அடிக்கவும் ஓவர்கள் வீசவும் கூடியவர்கள்” என்று கிளார்க் கூறினார்.
இதையும் படிங்க: கோலி, ரோகித் குறித்து நாங்கள் தலையிட மாட்டோம்.. இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கருத்து
முதல் ஒருநாள் போட்டியில் 15 பேர் கொண்ட அணியில் இருந்து பிரசித் கிருஷ்ணா மற்றும் இடது கை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. அடிலெய்ட் முக்கிய போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் பேசர் அல்லது ஆல்-ரவுண்டர்களில் ஒருவருக்கு பதிலாக குல்தீப் இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.






