தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து சீசன் தொடங்கி இருக்கிறது. வரிசையாக தற்போது இந்திய அணி t20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
தற்போது இங்கிலாந்து எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விளையாடுகிறது. அதன் பிறகு பிப்ரவரி ஆறாம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
கோலி கம்பேக் கொடுப்பது உறுதி:
தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடப் போகிறார்கள். இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவதை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கெயிப், “தோல்வியை விராட் கோலி என்றும் ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் எப்போதுமே கம் பேக் கொடுப்பதில் தீவிரமாக இருப்பார். எனவே விராட் கோலியை யாரும் குறைத்து மதிப்பீட்டு எழுதி விட வேண்டாம். ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் தனது வெற்றிப் பயணத்தை முடிக்கவில்லை”.
துபாயில் கோலி பட்டையை கிளப்புவார்:
“கோலி 50 சதங்கள் அடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்திருக்கிறார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள். வெள்ளை நிற பந்துகளில் விராட் கோலி எப்போதுமே வேற லெவல் தான் விளையாடுவார். விராட் கோலி கடைசியாக துபாயில் விளையாடிய போது 61 பந்துகளில் 122 ரன்களை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக குவித்தார்”.
“அந்த இன்னிங்ஸில் மட்டும் அவர் ஆறு சிக்ஸர்களை விளாசினார். விராட் கோலியின் பார்ம் எப்போதுமே சிறப்பாக தான் இருக்கும். அவர் துபாயில் விளையாடுவதை மிகவும் விரும்புவார். எனவே சாம்பியன்ஸ் கோப்பையில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார் என நான் நம்புகிறேன்” என்று முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி 2023 உலக கோப்பை தொடரில் 11 இன்னிங்ஸில் விளையாடி 765 ரன்கள் அடித்திருந்தார். கடைசியாக விராட் கோலி 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடினார். இதில் மொத்தமாகவே அவர் 58 ரன்கள் தான் அடித்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய பழைய பார்மை மீட்பார் என முகமது கெயிப் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.






