கேப்டன் விராட் கோஹ்லிக்கும் நடுவர் விரேந்திர சர்மாவுக்கும் இடையே நீடிக்கும் பகை ; சர்ச்சைக்குரிய முடிவை வழங்கிய டிவி அம்பயர் – ரசிகர்கள் அதிருப்தி

0
255
Virat Kohli and Virender Sharma

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடந்து வருகிறது. மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாக இந்த ஆட்டம் தொடங்கியது. டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக கூறினார். இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அதிலும் முக்கியமாக சுப்மன் கில் ஜமிசன் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து அசத்தினார். விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து மிகவும் வலுவான நிலையில் இந்திய அணி இருந்தது.

அதன்பிறகு சிறப்பாக அஜாஸ் பட்டேல் பந்து வீச ஆரம்பித்தார். முதலில் சுப்மன் கில் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட நியூஸிலாந்து அணி அடுத்த பந்தே அவரை வெளியேற்றியது. அதன்பிறகு புஜாரா களம் இறங்கினார். தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களம் கண்ட புஜாரா 5 பந்துகள் பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். புஜாராவையும் அஜாஸ் பட்டேல் பவுல்ட் முறையில் அவுட் ஆக்கினார். வேகமாக இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளே வந்தார்.

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் காத்திருக்கும் விராட் கோலி இந்த போட்டியில் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்த கோடி தனது கம்பேக் போட்டியாக இதில் கலந்து கொண்டார். ஆனால் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் விராட் கோலிக்கு அம்பயர் அவுட் வழங்கப்பட்டது. அஜாஸ் பட்டேல் வீசிய பந்து முதலில் பேட்டில் பட்டு அதன் பின்பு விராட் கோலியின் காலில் படுவது போலத் தான் பல ரசிகர்களுக்கு தெரிந்தது. ஆனால் களத்திலிருந்த நடுவர் அவுட் கொடுத்ததும் அதை உடனே ரிவ்யூ செய்தார் கோலி. அப்போது 3வது அம்பயர் ஆக இருந்த விரேந்திர சர்மா பலமுறை பார்த்துவிட்டு பந்து முதலில் பேட்டில் பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி களத்திலிருந்து நடுவரின் முடிவையே அவரும் அறிவித்தார். இதன் காரணமாக டெஸ்ட் வரலாற்றில் அதிக டக் அவுட் ஆன இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை விராட்கோலி படைத்தார். மேலும் சர்வதேச அரங்கில் அதிக டக் கோடான இரண்டாவது கேப்டன் என்ற மோசமான சாதனைக்கும் கோலி சொந்தக்காரர் ஆனார்.

ஏற்கனவே ஒரு முறை ஐபிஎல் தொடரில் இதுபோன்ற சர்ச்சையான முடிவுகளை வழங்கிய விரேந்திர சர்மா தற்போதும் அதேபோல் அதிர்ச்சிக்குரிய முடிவு ஒன்றை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மூன்றாவது செஷனுக்கு இந்திய வீரர்கள் களத்திற்குள் வரும்பொழுது ரசிகர்கள் நடுவர்களை பார்த்து அதிருப்தி கோஷங்களை எழுப்பினர். இது போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் அல்ட்ரா எட்ஜ் தொழில் நுட்பத்துடன் ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -