கிரிக்கெட்

விராட் கோஹ்லி பேட்டிங் ஸ்டெயிலில் எந்தக் குறையும் இல்லை ; தொடர்ந்து சொதப்புவதற்கு இதுதான் காரணம் – வாசிம் ஜாபர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி மொத்தமாக 3 இன்னிங்ஸ்களில் 81 ரன்கள் குவித்திருக்கிறார். தன்னுடைய 100வது மற்றும் 101 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் அவரது 71வது சர்வதேச சதம் இந்த டெஸ்ட் தொடரிலும் நிறைவேறாமல் போனது. அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் வேதனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் அவர் குறித்து ஒரு சில விஷயங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

அவரிடம் போதுமான நம்பிக்கை இல்லை

விராட் கோலி விளையாடும் விதத்தை பார்க்கையில் அவரிடம் எந்த விதமான தவறும் இல்லை. அவருடைய விளையாட்டை நுட்ப ரீதியாக பார்க்கையில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அவரிடம் தற்போது போதுமான நம்பிக்கை இல்லை அது நன்றாக வெளிப்படையாகவே தெரிகின்றது.

கடந்த சில வருடங்களில் ஒரு மிகப்பெரிய ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. எல்லா போட்டிகளிலும் சிறப்பாக துவங்கி குறைவான ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். எனவே அவரிடம் அந்த ஒரு பதட்டம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

- Advertisement -

ஒரே ஒரு சதம் அவர் குவித்து விட்டால் போதும், அவருடைய பழைய நம்பிக்கையும் தைரியமும் அவரிடம் வந்து விடும். அப்படி நடந்து விட்டால் மீண்டும் நாம் பழைய கிங் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை தொடர்ச்சியாக கண்டு களிக்கலாம் என்றும் நம்பிக்கையுடன் வாசம் ஜாபர் கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் அபாரமாக இருந்தது

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்(92 ரன்கள்) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்(67 ரன்கள்) என இரண்டிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்ச ஸ்கோர் குவித்திருக்கிறார்.

சமீப நாட்களில் ரிஷப் பண்ட்டுடைய ஆட்டம் மிக அற்புதமாக இருந்திருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம் கடந்த சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடும் விதம் பிரமாதமாக இருக்கிறது. அவருடைய ஆட்டம் நேர்த்தியாக இருக்கிறது என்றும், அவர் அபாரமாக விளையாடி வருகிறார் என்றும் வாசம் ஜாபர் புகழ்ந்து கூறியுள்ளார்.

Published by