ஐபிஎல் 2024

கோலிய கேள்வி கேளுங்க.. வேகமா விளையாட சொல்லுங்க.. ஆனா இதை செய்யாதிங்க – ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் பவர் பிளேவிலேயே போட்டியை முடித்து விட்டார்கள். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து ஹர்பஜன் சிங் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சொந்த நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தத் தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்குள் கொண்டுவரப்பட்டார்கள். எனவே அவர்கள் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவார்கள் என்பது உறுதியானது.

இதற்கு அடுத்து விராட் கோலி ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மையால் ஸ்டிரைக் ரேட் குறைவாக விளையாட வேண்டியதாக அமைந்தது. உடனே அவரது ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்தது.

மேலும் அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்கின்ற அளவுக்கு பேச்சு வார்த்தைகள் சென்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலியின் பெயரும் இடம் பெற்றது. மேலும் அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்தான விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான முறையில் பதில் அளித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக மோகித் சர்மா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் கோலி சிக்சர் உடன் ஆரம்பித்தார். மீண்டும் பவர் பிளேவில் இரண்டாவது சிக்சரை அடித்து அதிரடியை தொடர்ந்தார். நேற்று இருநூறு ஸ்ட்ரைக் ரேட் மேல் அவர் இருந்தார். ஆனால் திடீரென விக்கெட்டுகள் சரிந்ததால் அவர் 155 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு பேட்டிங் வேகத்தை குறைத்து 27 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: ஓபனா சொன்னா.. கில் இன்னும் நிறைய கத்துக்கனும்.. இவர் இல்லாதது எங்களுக்கு பிரச்சனை – டேவிட் மில்லர் பேட்டி

இதுகுறித்து ஹர்பஜன்சிங் பேசும் பொழுது “விராட் கோலி இந்த விளையாட்டின் ஜாம்பவான். அவர் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர். ரன்களை வைத்து இந்த மூன்று பேரையும் குறையே சொல்ல முடியாது. விராட் கோலி தன்னை யார் முன்னாலும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவரது ஸ்கோரிங் விகிதம் நன்றாக இருக்கிறது. நீங்கள் அவரைக் கேள்வி கேட்கலாம், இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக இருக்க கேட்கலாம். ஆனால் அவரை உங்களால் குறை சொல்ல முடியாது, அப்படி செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

Published by