இன்று என்னுடைய அறிமுகப் போட்டியைப் போல உணர்ந்தேன் – 100வது டெஸ்டில் விளையாடிய விராட் கோலியின் பேட்டி

0
184
Virat Kohli

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று வெற்றிகரமாக தொடங்கியது. மொஹாலியில் தொடங்கிய இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா முதல் முறையாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தினார். மறுபக்கம் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்று முழுவதும் விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 97 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹனும விஹரி 58 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய லசித் எம்புல்தனியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

முதல் போட்டியில் விளையாடுவது போல் நான் உணர்ந்தேன்

100வது போட்டியில் அடியெடுத்து வைத்த விராட் கோலிக்கு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக சிறப்பு இந்திய கேப்பை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரது கையால் கொடுத்தார். விராட் கோலி பேட்டிங் செய்ய வந்த வேளையில் மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

முதல் பந்தில் இருந்து மிக நிதானமாக விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இன்று 100வது போட்டியில் விளையாடிய அனுபவத்தை அவர் போட்டி முடிந்த பின்னர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“இன்று காலை நான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று உணர்ந்தேன். ஒரு கிரிக்கெட் வீரர் எப்பொழுதும் எந்தவித கவலையுமின்றி சந்தோசத்துடனும் முழு மனதோடும் கிரிக்கெட் விளையாட வேண்டும்.நான் இன்றும் அவ்வாறு தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். முழுமனதோடு சந்தோசமாக இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் என்னுடைய உடல் அமைப்பு எவ்வளவு நாட்கள் ஒத்துழைக்கிறதோ, அவ்வளவு நாட்கள் நான் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரும் விதத்தில் முழு ஈடுபாட்டுடன் நான் விளையாடுவேன். அந்த ஈடுபாடு கடைசிவரை என்னுள் இருக்கும் என்று கூறி முடித்தார்.