முதல் போட்டியில் 1, இரண்டாவது போட்டியில் 11 ; டி20ஐ தொடரில் விராட் கோலி படைத்துள்ள மோசமான சாதனை !

0
85
Virat Kohli

2019ஆம் ஆண்டிற்கு முன்னால் விராட் கோலியிடம், அடுத்த மூன்று வருடங்களில் உங்கள் பேட்டிங் பார்ம் இந்தளவிற்குச் சரியும் என்று யாராவது கூறியிருந்தால், அவர் சிரிக்கத்தான் செய்திருப்பார். அவர் மட்டுமல்ல யாருமே அந்தக் கூற்றை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நம்ப முடியாத அளவில்தான் அவர் பேட்டிங் பார்ம் சரிந்திருக்கிறது. பேட்டிங்கில் ஆடும் பொழுதெல்லாம் சாதனைகளைச் செய்த விராட்கோலி, இன்று ஆடும்பொழுது எல்லாம் ஏதாவது ஒரு மோசமான சாதனையைச் செய்கிறார்!

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாகச் சதம் அடித்தவர் அதற்குப் பிறகு இதுவரை ஒரு சதமும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வரவில்லை. ஆரம்பத்தில் அவரிடம் சதம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பை வைத்த இரசிகர்கள், இப்பொழுதெல்லாம் அவர் களத்தில் கொஞ்ச நேரம் நின்று ஆடினால் போதும் என்று நினைக்கிறார்கள். அந்தளவிற்கு அவரது பேட்டிங் பார்ம் சரிந்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு இருபது ரன் சராசரிக்கும் கீழ் வந்து அதிர்ச்சி அளித்து, பின்பு சுதாரித்து அந்த மோசமான நிகழ்வை தட்டுத்தடுமாறி தடுத்தார். ஆனால் இந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதாய் ரன்களை குவிக்கவில்லை. மேலும் மூன்று ஆட்டங்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக் அடித்தார்.

ஐ.பி.எல் தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று அந்த அணியோடு விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி இருபது ரன்களை தாண்டவில்லை. இதில்லாமல் பந்தை ஆடுவதா தடுப்பதா என்று குழம்பி ஆட்டமிழந்தார்.

இந்த ஒரு டெஸ்ட் போட்டி முடிந்து நடந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியவர் அந்தப் போட்டியில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது மூன்றாவது போட்டியில் ஆறு பந்துகளில் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு ஒரு டி20 தொடரில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விராட்கோலி விளையாடிய பொழுது, அயர்லாந்திற்கு எதிராக இரண்டு போட்டிகளில் 2018ஆம் ஆண்டு ஒன்பது ரன்களை மட்டுமே அடித்திருந்தார். தற்போது அதற்கடுத்து இந்த முறை இங்கிலாந்திற்கு எதிராக 12 ரன்களை மட்டுமே எடுத்து, தனது இரண்டாவது மோசமான செயல்பாட்டை பதிவு செய்திருக்கிறார்!

- Advertisement -