“விராட் கோலி சுயநலமாதான் விளையாடினார்.. ஆனா ரோகித் தியாகி..!” – பாகிஸ்தான் முகமது ஹபிஸ் அதிரடி குற்றச்சாட்டு!

0
827
Virat

நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பிரமாண்டமான வெற்றி பெற்றது. தற்பொழுது இந்த வெற்றியை பலவிதமான சர்ச்சைகளையும் கொண்டு வந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் அதிகபட்சமாக அடித்திருந்த 49 சதங்களை சமன் செய்தார். இது அவருடைய 35 வது பிறந்தநாளில் வந்தது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி மிகவும் மெதுவாக விளையாடியதாகவும், இதன் காரணமாக ரன்கள் குறைந்து விட்டதாகவும், அவர் சுயநலத்துடன் பேட்டிங் செய்தார் என்றும் பல மாதிரி கூறப்பட்டது.

ஆனால் அடுத்து தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து 83 ரன்களில் ஆட்டம் இழந்த பொழுது தான் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்திய ரசிகர்களுக்கே ஒரு வித புரிதல் வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் விராட் கோலி சதத்திற்காக சுயநலமாக விளையாடினார் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “விராட் கோலியின் பேட்டிங்கில் நான் சுயநல உணர்வை பார்த்தேன். இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49ஆவது ஓவரில் அவர் தன்னுடைய சதத்தை எட்டுவதற்கு ஒரு சிங்கிள் எடுக்க நினைத்தார். அதிரடியாக விளையாட நினைத்து அணிக்கு முக்கியத்துவம் தர நினைக்கவில்லை.

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மாவால் சுயநலமாக விளையாடி இருக்க முடியும். ஆனால் அவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் தனக்காக அவர் விளையாடுவது கிடையாது.

ரோகித் சர்மா சரியான நோக்கத்திற்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தது பாராட்டுக்குரியது. அவர் முதல் ஆறு ஓவர்களில் தாக்கி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இப்படியான ஆடுகளத்தில் பந்து புதியதாக இருக்கும் பொழுது ரன்கள் கொண்டு வந்தால்தான் உண்டு. எனவே அவர் அதை பயன்படுத்தினார்.

விராட் கோலி நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் 97 ரன்கள் எடுக்கும் வரை மிக அழகாக பேட்டிங் செய்தார். ஆனால் அவர் கடைசி மூன்று சிங்கிள்ஸ் எடுத்த நோக்கம் குறித்து நான் பேசுகிறேன். அந்த நேரத்தில் பவுண்டரிகளை தேடாமல் சிங்கள் எடுத்தார். எப்போதும் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் நலனை முக்கியமானதாக இருக்க வேண்டும்!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்!