விராட் கோலி ஓபனிங்; அஸ்வின் வெளியிட்ட அதிரடியான ஆர்.சி.பி பிளேயிங் லெவன்!

0
490
Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் களத்தில் எப்படி பரபரப்பாக இயங்கக்கூடியவரோ அதே போல் அவர் தனக்கு வெளியில் இருக்கும் எல்லா விஷயங்களிலும் அப்டேட் ஆக இருக்கக்கூடிய ஒரு நபர்!

அவர் தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விஷயங்களை கொண்டு வந்து ரசிகர்களுக்கு தெரியாத புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவார்.

- Advertisement -

இத்தோடு கிரிக்கெட் தொடர்பான டெக்னிக் விஷயங்களையும் சாமானிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புரியும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். தனது பந்துவீச்சில் எப்படி அவர் ஒரு விஞ்ஞானியோ அதேபோல் கிரிக்கெட் தொடர்பாக உலகமெங்கும் நடக்கும் விஷயங்களை தேடிக் கொண்டு வந்து தருவதிலும்தான்.

ஐபிஎல் 16 வது சீசன் மார்ச் 31ஆம் தேதி துவங்க இருக்க ஐபிஎல் காய்ச்சல் இந்தியாவில் பெரிய அளவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த 11 வீரர்களுடன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றைத் தாண்டி குவாலிபயர் சுற்றில் தோற்று வெளியேறி இருந்தது பெங்களூர் அணி. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, ஹிமான்சு சர்மா, வில் ஜேக்ஸ், மனோஜ் பண்டாஜ், ராஜன்குமார், அவினாஷ் சிங் ஆகியோரை வாங்கி இருந்தது.

- Advertisement -

இந்த மினி ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனக்கு வீரர்களை வாங்கியதில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜேக்சை மூணு புள்ளி இரண்டு கோடிக்கு வாங்கியது. ஆனால் இவர் எதிர்பாராத விதமாக காயமடைந்து தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியே, நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல்லை வாங்கி இருக்கிறது.

அஸ்வின் வெளியிட்டுள்ள ஆர்.சி.பி அணியின் உத்தேச பிளேயிங் லெவன் ;

- Advertisement -

பாப் டு பிளிசிஸ்
விராட் கோலி
ரஜத் பட்டி தார்
கிளன் மேக்ஸ்வெல்
ஷாபாஷ் அகமத்
தினேஷ் கார்த்திக்
மகிபால் லோம்ரர் (அ) அனுஜ் ராவத்
வனிந்து ஹசரங்கா
ஜோஸ் ஹேசில்வுட் (அ) ரீஸ் டாப்லி
முகமது சிராஜ்
ஆகாஷ் தீப்