ரோஹித் ஷர்மா இல்லாத நேரத்தில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை – கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா

0
52

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்தது. மீதம் ஒரு போட்டி எதிர்பாராதவிதமாக நடைபெறாமல் போனது அப்போட்டி மீண்டும் தற்போது வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தவிர்க்க வெற்றி பெற வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா காரணமாக தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் விளையாட முடியாத காரணத்தினால் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் இந்திய அணியில் ஓபனராக களமிறங்க போவதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி கேப்டனாக அணியை வழிநடத்த வாய்ப்பில்லை

- Advertisement -

விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலாக நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக பதவி ஏற்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

அவராகவே கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் இந்திய அணி அவரது கேப்டன் பதவியை பறிக்க வில்லை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கேப்டன் ரோஹித் இல்லாத நேரத்தில் அவர் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள என்னைப் பொறுத்தவரையில் வாய்ப்பு இல்லை. இருப்பினும் இந்திய நிர்வாகம் மற்றும் தேர்வு குழு என்று நினைக்கிறது இது சம்பந்தமாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் விராட் கோலி எப்பொழுதும் அணிக்காக தன்னுடைய முழு பங்களிப்பை கொடுக்கக் கூடிய வீரர். ஒரு வீரராக அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்பொழுது வரை அவர் சதம் அடிக்கவில்லை. இதை வைத்து நாம் அவர் சற்று நெருக்கடியான நிலையில் இருக்கிறார் என்று கூறிவிட முடியாது. அவரது கவனம் எப்பொழுதும் இந்திய அணிக்கு என்ன தேவை என்பதில் தான் இருக்கும். சொந்த சாதனைக்காக விளையாடும் வீரர் அவர் அல்ல. சொந்த சாதனையை விட இந்திய அணிக்கு என்ன தேவையோ அதையே கடைசி வரை அவர் கொடுத்துக் கொண்டிருப்பார் என்றும் ராஜ் குமார் ஷர்மா கூறியுள்ளார்.

- Advertisement -