விராட் கோலி நல்லாதான் ஆடுறார் ஆனா இப்படி ஆடினா சரிவராது; சூரியகுமார் தனி ஆளா முடிச்சிருவாரு – ஹர்பஜன் சிங்!

0
643
Viratkohli

இன்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்வதற்கான முக்கியமான போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன!

இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் முதுகலும்பான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாகவே இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் அது அணியின் வெற்றியை பாதிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

டெல்லி அணியுடன் கடந்த போட்டியில் அவரது மெதுவான ஆட்டத்தின் காரணமாக ரன்கள் குறைந்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அவர் அதிரடியாக ரன்கள் எடுக்க முடியாதது இதற்கு காரணமாகவும் இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் ” இந்த சீசனில் நானூறு ரன்களுக்கு மேல் அடித்து விராட் கோலி நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அடுத்த கட்டத்திற்கு அணியை கொண்டு செல்வதே இலக்காக இருப்பதால், அவர் இன்னும் தனது ஸ்ட்ரைக் ரேட்டில் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்.

- Advertisement -

சூர்யா இந்தத் தொடரில் இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதே ஆட்டம் தொடர்ந்தால் அவர் இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியை ஒரே கையால் வென்று தந்து விடுவார்!” என்று கூறியிருக்கிறார்!