“விராட் கோலி பின்வாங்குற ஆள் கிடையாது; அவருக்கு எதிரா எடுத்ததும் செமையா பண்ணிட முடியாது” – கடுமையாக எச்சரிக்கும் ஆஸ்திரேலியா லெஜன்ட்!

0
336
Viratkohli

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது!

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இதேபோல் இங்கிலாந்தில் நியூசிலாந்து இந்திய அணிகளுக்கு நடைபெற அதில் இந்தியா அணி தோற்று முதல் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்டது.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் பழைய ஃபார்முக்கு விராட் கோலி 3 வடிவத்திலும் திரும்பி வந்திருக்கிறார். எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா லெஜெண்ட் வீரர் கிரேக் சேப்பல் ” 2014 மற்றும் 2021 இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன் மற்றும் பிராட் பந்துவீச்சு மூலம் நிறைய கேள்விகளை எழுப்பினர். அவர்கள் தங்களுக்கு சாதகமான நிலைமையில் நல்ல லைன் மற்றும் லென்த்தில் வீசினர்.

இதன் மூலம் அவர்கள் விராட் கோலியை சிறப்பான பேட்ஸ்மேன் என்று புரிந்து கொண்டனர். இப்படியான வீரருக்குப் பந்து வீசும் பொழுது அவர்கள் தங்களையும் சேர்த்து உயர்த்திக் கொள்கின்றனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் முதல் பந்தில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக இங்கிலாந்தில் இதைச் செய்ய முடியும் என்று நினைப்பது சரி கிடையாது. ஏனென்றால் இங்கிலாந்து நிலைமையை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்தான் மிகவும் சரியாக அறிந்தவர்கள். அவர்களையே விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட் செய்வதை விரும்புகிறார். ஆஸ்திரேலியாவில் வைத்து நாம் அதை பார்த்து இருக்கிறோம். அவர் எவ்வளவு திறமையான பேட்ஸ்மேன் என்பதற்கு அவரது சாதனைகளே சான்று.

அவர் போட்டியை விரும்பக் கூடியவர் ; பின் வாங்கக் கூடியவர் கிடையாது. எனக்குத் தெரிந்து ஓவல் மைதானத்தின் பவுன்ஸ் விராட் கோலிக்கு நன்றாக இருக்கும்.

இதுவரை அங்கு வானிலை வறண்டு கிடக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். வானிலை இப்படியே இருந்தால் ஓவல் மைதானம் ஆஸ்திரேலியா மைதானம் போல்தான் இருக்கும்.

இந்த நிலைமை விராட் கோலிக்கு விளையாட மிகவும் நன்றாக இருக்கும். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகத்தான் செயல்பட்டு இருக்கிறார். மனதளவில் மாறி சரியாக வந்திருக்கிறார். அவர் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!