“விராட் கோலி தான் எனக்கு மிகவும் விருப்பமான வீரர்” – பிஎஸ்எல் நட்சத்திர வீரர் அதிரடி பேட்டி!

0
754

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற வருகிறது. எங்கள் பங்கு பெறும் இந்தப் போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் உலகின் முன்னணி வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணியும் சதாப்கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 20 ஓவர்களில் 156 ரண்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது . அதனைத் தொடர்ந்து ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 14.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . அந்த அணியின் ரஹ்மத்துல்லா குர்பாஸ் மிகச் சிறப்பாக ஆடி 31 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும் . இஸ்லாமாபாத் அணிக்காக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

- Advertisement -

பெஷாவர் சல்மி அணிக்காக கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அணியின் துவக்க வீரரான ரஹ்மத்துல்லா குர்பாஸின் ஆட்டம் இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. இந்தப் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் தனக்கு பிடித்தமான வீரர் யார் என்பதை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசியுள்ள குர்பாஸ் ” எனது சிறு வயது முதலே தென் ஆப்பிரிக்கா அணியின் 360 டிகிரி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் தான் எனது குரு என்று கூறினார்.

மேலும் இது பற்றி விரிவாக பேசிய அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக கூறினார். நேற்றைய போட்டியின் போது கூட முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் ஆடிய விதத்தை நன்கு கவனித்தேன். அதிலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்து என்னுடைய பேட்டிங்கின் போது அவற்றை செயல்படுத்தி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் எனக் கூறினார்.

தற்போதைய கிரிக்கெட்டில் விராட் கோலி தான் தனக்கு மிகவும் விருப்பமான வீரர் என தெரிவித்த குர்பாஸ் தனது சிறு வயது முதலே விராட் கோலியின் பேட்டிங்கை மிகவும் ரசிப்பதாக தெரிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் கிளாசிக் பேட்டிங் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும் கூறினார். தற்போது இருக்கும் உலக கிரிக்கெட் வீரர்களின் எனக்கு மிகவும் விருப்பமான வீரர் விராட் கோலி தான் என தெரிவித்தார் . நீண்ட காலமாக விராட் கோலியின் பேட்டிங்கிற்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் அந்த பேட்டியில் கூறினார் குர்பாஸ்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் . இந்த ஆண்டு அவர் வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மனாக விளங்கும் ரஹ்மத்துல்லா குர்பாஸ் இந்த முறை நிச்சயமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.