பாபர் அசாம் தான் பெஸ்டுன்னு சொல்ல மாட்டேன், விராட் கோலி தான் டாப்; பேட்டிங்ல ரெண்டு பேரும் ஒன்னு, ஆனால் கோலி கிட்ட ஒரு ஸ்பெஷல் இருக்கு – முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேட்டி!

0
1272

பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரில் விராட் கோலி தான் பெஸ்ட் என்று காரணத்துடன் கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்.

சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் ஒருவராக பார்க்கப்பட்டு வரும் விராட் கோலி, தனது அபாரமான பேட்டிங் மூலம் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார். பலரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல சாதனைகளை விராட் கோலி படைத்திருப்பதால் முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட அரைசதங்கள் உட்பட 25 ஆயிரம் ரன்கள அடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 13,000 ரன்கள் அடித்து இமாலய சாதனை படைத்திருக்கிறார்.

விராட் கோலியின் சில சாதனைகளை முறியடித்திருக்கும் பாபர் அசாம், பாகிஸ்தான் ரசிகர்கள் பலரால் விராட் கோலியுடன் ஒப்பிட்டும் பேசப்பட்டு வருகிறார். இருவரில் யார் பெஸ்ட் என்கிற விவாதமும் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில் இணைந்து கொண்டு அதற்கான பதிலையும் கூறியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்.

“விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன். அவர் மட்டுமல்லாது அணியையும் தன்னுடன் சேர்ந்து எடுத்துச் செல்வார். அவர் அணியில் இருந்தால் நல்ல மனநிலை நிலவும். குறிப்பாக அவரது உடல் தகுதி எவராலும் நெருங்க முடியாது. இவரை போலவே அணி வீரர்களையும் நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக வலியுறுத்தி வருகிறார்.

- Advertisement -

அதேபோல் பாபர் அசாமம் தலைசிறந்த பேட்ஸ்மேன். அவரது பேட்டிங்கில் எந்த வித குறையும் கூற இயலாது. ஆனால் உடல் தகுதியை பொருத்தவரை விராட் கோலி டாப். கேப்டன் பொறுப்பிலும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு காட்டியுள்ளார். கிரிக்கெட் என்னும் விளையாட்டில் உடல்தகுதியும் முக்கியம். அப்போதுதான் முக்கியமான போட்டிகளில் அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். இருவரையும் ஒப்பிட்டு பேச முடியாது என்றாலும் சில இடங்களில் விராட் கோலி முன்னே நிற்கிறார்.

ஆனாலும் இந்த ஒப்பீட்டில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது சரியானதாக ஐஐக்கதோ, அதுபோலவே இந்த ஒப்பீடும் சரியாகாது. அவர்களது நாடுகளில் இருவரும் தலைசிறந்த வீரர்களாக இருக்கிறார்கள்.” என்றார்.