இந்திய கிரிக்கெட்

இந்தியா நியூசிலாந்து போட்டி.. விராட் கோலி படைக்கப் போகும் உலக சாதனை.. கிரிக்கெட் உலகின் முதல் வீரர்.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட் அணி நாளைய நியூஸிலாந்து அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி நாளைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக புதிய உலக சாதனை ஒன்றைப் படைக்க தயாராக இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து போட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்ந்தவர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். 2008ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 2011ம் ஆண்டில் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற போது அதில் இளம் வீரராக இருந்து தனது கனவை பகிர்ந்து கொண்டார்.

அதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கிய வீரராக அங்கம் வகித்து கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். அதற்குப் பிறகு கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் டி20 உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி உலகின் முதல் வீரராக சாதனை படைக்கப் போகிறார்.

- Advertisement -

விராட் கோலி படைக்க உள்ள சாதனை

ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை விராட் கோலி 299 போட்டிகளில் மொத்தமாக விளையாடி இருக்கிறார். எனவே நாளை தனது 300 வது போட்டியில் விளையாட உள்ள விராட் கோலி, ஒரு நாள் தொடரில் 300 போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் 100 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்கிற சாதனையை விராட் கோலி நாளை படைக்க இருக்கிறார். இதற்கு முன்னால் விளையாடிய ஜாம்பவான்கள் கூட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் விளையாடினாலும் டி20 போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் குறைவான டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செமி பைனலில் இந்திய அணியின் விருப்பம் எது.? தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா.? ராபின் உத்தப்பா ஓபன் டாக்

விராட் கோலி இதுவரை 299 ஒரு நாள் போட்டிகள், 123 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் தனது முதல் ஒருநாள் போட்டியை 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமாகி விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்று இருக்கிறார்.

- Advertisement -
Published by