இந்திய கிரிக்கெட்

ஒவ்வொரு பந்தும் மைன்ட் கேம்.. நான் சந்தித்த பவுலர்ல இவர்தான் கஷ்டமானவர் – விராட் கோலி வெளியிட்ட தகவல்

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தான் சந்தித்ததில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார்? என்கின்ற கேள்விக்கு மிகவும் சுவாரசியமான ஒரு பந்துவீச்சாளர் பெயரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி நிர்வாகம் ரஜத் பட்டிதாரை கேப்டனாக அறிவித்திருக்கிறது. விராட் கோலி கேப்டனாக வருவதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

விராட் கோலியின் பலதரப்பட்ட கருத்துக்கள்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலி கலந்து கொண்ட ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவரிடம் பல முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் மிகவும் தைரியமாக வெளிப்படையான கருத்துக்களை விராட் கோலி தெரிவித்தார்.

இதில் தன்னுடைய ஓய்வு இந்திய அணி சிறப்பான நிலையில் இருக்கும் பொழுது நடக்கும் எனவும், பிசிசிஐ மீண்டும் வீரர்களுடன் குடும்பத்தினரை முழுவதுமாக தங்க விட அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன் மீடியாக்கள் விளையாட்டு குறித்து ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும், தான் என்ன மதிய உணவு உட்கொண்டேன் என்று ஆராயக்கூடாது எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

நான் சந்தித்ததில் கடினமான பவுலர்

இந்த நிலை எல்லாம் அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி இடம் அவர் இதுவரையில் சந்தித்ததில் மிகவும் கடினமான பவுலர் யார் என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. மிட்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஆண்டர்சன், டிம் சவுதி ஆகியோரது பெயர்களை விராட் கோலி கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி தான் ஐபிஎல் தொடரில் சந்தித்து விளையாடும் இந்திய பந்துவீச்சாளரை கடினமான பந்துவீச்சாளர் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : பிசிசிஐ எங்க புரூக்கை தண்டித்தது சரிதான்.. அவரால இவ்வளவு பிரச்சனை உண்டாகி இருக்கு – மொயின் அலி ஆதரவு

இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது ” தற்போது உலகில் தலை சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் என்னை ஐபிஎல் தொடரில் சில முறை வெளியேற்றி இருக்கிறார். நாங்கள் இருவரும் வலையில் சந்தித்துக் கொண்டால் கூட அது மிகவும் தீவிரமானதாக இருக்கும். குறிப்பாக நாங்கள் ஐபிஎல் தொடரில் மோதிக் கொள்வது போல வலைப்பயிற்சியில் மோதிக் கொள்வோம். மேலும் அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் மைன்ட் கேம் போல இருக்கும். நான் சந்தித்ததில் அவர்தான் மிகவும் கடினமான பவுலர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts