2வது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையைப் படைதுள்ள விராட் கோலி

0
541
Virat Kohli Duck Out vs Sa 2nd ODI

இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் முதல் போட்டியில் வென்று வெற்றியுடன் தொடரை துவக்கினாலும் அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியுற்று இந்திய அணி தொடரை இழந்தது. தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடருக்கு ரோகித் காயம் காரணமாக விலகியதால் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக ராகுலின் மோசமான கேப்டன்சி கூறப்பட்டது. முக்கியமான நேரத்தில் அவர் எடுக்க தயங்கிய முடிவுகளால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. முக்கியமாக வெங்கடேஷுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச்சில் தராதது பெரிதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை இழக்காமல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

தற்போது 2-வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. அவ்வளவு விமர்சனங்களுக்கு பிறகும் அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இரண்டாவது போட்டியில் ஆட தொடங்கியிருக்கிறார் ராகுல். ருத்ராஜ் அணியில் இடம் பெறுவார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் இன்றும் அவர் இடம்பெறவில்லை. அதுவும் போக ராகுல் தனது வழக்கமான மிடில் ஆர்டரில் விளையாட வேண்டுமென்று பலர் கூறி வந்த நிலையில் இன்றைக்கும் அவர் துவக்க வீரராக தான் விளையாடி வருகிறார்.

இது எல்லாவற்றையும் விட இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி உள்ளார். சிறந்த பந்து வீச்சாளர்களையே மிகவும் எளிதாக எதிர்கொள்ளும் விராட் கோலி, இந்த முறை கேஷவ் மஹராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுவரை 14 முறை ஒரு நாள் போட்டிகளில் டக் அவுட் ஆகி விட்ட விராட் கோலி தற்போதுதான் முதல் முறையாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் பந்து வீச்சில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த ஆட்டத்தில் வென்று கொடுத்தால் தான் இந்தியா தொடரை இழக்காமல் இருக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை கண்டு வருகின்றனர்.