3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ; ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கோலி செய்த மோசமான சாதனை – ரசிகர்கள் வருத்தம்

0
638
Virat Kohli

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக இந்த தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோகித் இந்த தொடர் முதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ரோகித் மற்றும் தவான் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்தனர். ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் அடித்தாலும் ரோஹித்தை அல்சாரி ஜோசப் அவுட் ஆக்கினார். ரோகித் ஆட்டம் இழந்ததும் களத்துக்குள் வந்தார் விராட் கோலி. இந்த ஆட்டத்தில் சதம் கடந்து பல காலமாக சதம் அடிக்காமல் இருக்கும் வேதனையை நீக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கோலி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டக் அவுட் ஆனதை உணர்ந்து களத்தை விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறினார் விராட் கோலி.

- Advertisement -

இந்த டக் அவுட் விராட் கோலியின் ஆட்ட முறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 51 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை மட்டுமே டக் அவுட் ஆகியிருந்தார் விராட் கோலி. ஆனால் இந்த ஆண்டு 6 இன்னிங்சில் 2 முறை டக் அவுட் ஆகி விட்டார். சுமார் 80 மாதங்களுக்கு பிறகு ஒரு ஒரு நாள் தொடரில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்காமல் விராட் கோலி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தன்னுடைய இரண்டாவது குறைந்தபட்ச ரன்களை இந்த தொடரில் எடுத்துள்ளார் கோலி. மூன்று போட்டிகளில் வெறும் 26 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மூன்று ஆட்டங்களில் 13 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தால் கோலி. மேலும் கடைசியாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் கோலி தவறிய தொடர் கடந்த 2015ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த தொடர் ஆகும்.

நடக்க இருக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆவது விராட் முன்பு போல அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -