இங்கிலாந்தில் தன்னைப் பின்தொடர்ந்து வந்த கேமராமேனுக்கு சிரிப்பை பரிசளித்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
92

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்தது. மீதம் ஒரு போட்டி எதிர்பாராதவிதமாக நடைபெறாமல் போனது அப்போட்டி மீண்டும் தற்போது வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தவிர்க்க வெற்றி பெற வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா காரணமாக தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் விளையாட முடியாத காரணத்தினால் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் இந்திய அணியில் ஓபனராக களமிறங்க போவதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னராக இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். லெய்செஸ்டர்ஷிர் அணிக்கு எதிராக அவர்கள் ஆடிய பயிற்சி ஆட்டம் சமனில் முடிவடைந்தது. விராட் கோலி இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் 33 ரன்கள் குவித்தார் இரண்டாவது இன்னிங்சில் 67 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

பின் தொடர்ந்து வந்த கேமராமேன்னுக்கு சிரிப்பை பரிசளித்த விராட் கோலி

- Advertisement -

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து தங்களுடைய அறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கேமராமேன் ஒருவர் விராட் கோலியை பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்.

ஒரு சில தூரம் நடந்து முடிந்த பின்னர் திடீரென திரும்பி பார்த்த விராட் கோலி வாட்ஸ்அப் என்று கூறி அவருக்கு சிரிப்பை பரிசாகக் கொடுத்தார். எந்தவித கோபமும் இன்றி அவ்வாறு அவர் கேமராமேனை பார்த்து சிரித்து மரியாதை கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை எத்பாஸ்டன் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. “ராஜாவுடன் நடக்கிறேன். எனது வாழ்க்கை தற்பொழுது முழுமை அடைந்து விட்டது”, என்று அந்த அட்மின் விராட் கோலியை பெருமையாக புகழ்ந்து வீடியோவை பகிர்ந்தார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய 71 வது சதத்தை அடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.