இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் இந்த முடிவை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியின் ஜாம்பவான்களான தோனி, ரோகித் அஸ்வின் மற்றும் விராட் கோலி என யாருக்குமே பிசிசிஐ கடைசி போட்டியில் வழி அனுப்புவது இல்லை. கடைசியாக சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.
ரசிகர்கள் கோலிக்காக ஏற்பாடு:
இந்த சூழலில் விராட் கோலிக்கு சிறப்பான முறையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வழி அனுப்ப வேண்டும் என பெங்களூர் ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை ஆர் சி பி அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக நன்றி தெரிவிக்கும் ஒரு போட்டியாக மாற்ற ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ரசிகர்களும் விராட் கோலியின் வெள்ளை நிற டெஸ்ட் போட்டி ஜெர்சியை வாங்கி அணிந்து கொண்டு வருமாறு ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் டெஸ்ட் ஜெர்சி இல்லை என்றால் கூட வெள்ளை நிற டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வாருங்கள்.
ரசிகர்கள் முயற்சி:
இதன் மூலம் விராட் கோலிக்கு நாம் டெஸ்ட் போட்டிக்கான வழியனப்பை ஐ பி எல் போட்டிகளில் நடத்த முடியும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் போஸ்ட்களை போட்டு ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும் ஆர்சிபி அணியும் தங்களுடைய ஜெர்சியை வெள்ளை நிறத்தில் மாற்றி விராட் கோலிக்கு வழி அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. கோலி, ரோகித் முடிவு குறித்து அஸ்வின் கருத்து
ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகள் விளையாடும் கோலிக்கு டெஸ்ட் போட்டிக்கு விடை அளிக்க ரசிகர்கள் பயன்படுத்துவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்தவித ஒரு போட்டியும் தற்போது நடைபெறாத நிலையில் தோனிக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி மீண்டும் கிடைக்காமல் போய்விட்டது.






