நீங்க ஆடிய கிரிக்கெட்டுக்கு சமமா யாருமே இல்ல.. திரும்பி வந்து செம கேரக்டர் காட்டி இருக்கீங்க – விராட் கோலி வாழ்த்து

0
6
Virat

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இந்த வெற்றிக்கு விராட் கோலி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து அந்த இறுதிப் போட்டி உடன் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து பெற்றார்கள்.

- Advertisement -

அலாரம் அடித்த போட்டி

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் தடுமாறி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய அலாரம் ஆக அமைந்தது. இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் இந்திய பிளேயிங் லெவலில் மீண்டும் இடம் பெற்றார். அவர் உள்ளே வந்ததும் எல்லாம் மாறத் தொடங்கியது. இன்று இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற அதற்குப் பின்னால் அவருடைய பங்களிப்பு மிகப்பெரியதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி வாழ்த்து

இந்த நிலையில் இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்த்து பதிவில் “சாம்பியன்ஸ். அகமதாபாத் போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றி. இந்த தொடர் முழுக்க நீங்கள் விளையாடிய வெடித்து சிதறும் கிரிக்கெட்டுக்கு எந்த அணியும் சமமாக இல்லை”

“கடினமான தருணங்களிலும் தொடர்ந்து போராடி, மீண்டும் உலக சாம்பியன் ஆக மாறியதில் வீரர்கள் காட்டிய கேரக்டர் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த சாதனையை செய்த வீரர்கள் மற்றும் நிர்வாக குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -