கடந்த சில காலங்கலாக விராட் கோலி அபாரமாக ஆடாமல் போனதற்கு இது தான் காரணம் ; இனி அவர் சிறப்பான ஆட்டத்தைக் காட்டுவார் – கிளென் மேக்ஸ்வெல்

0
63
Virat Kohli and Glenn Maxwell

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே பெங்களூரு அணி வீரர் விராட் கோலி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் நான் எனது கேப்டன் பதவியை முடித்துக் கொள்ளப் போகிறேன் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்பொழுது பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் ஃபேப் டு பிளேசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு இறுதியில் பொறுப்பேற்றார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக நீடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி தாமாக முன்வந்து பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் மூன்று வகை கிரிக்கெட் பார்மெட்டுக்கும் கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வருகிறார். இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியிலும் தற்பொழுது விராட் கோலி வீரராக மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழைய விராட் கோலியை இனி நாம் பார்க்கலாம்

பெங்களூரு அணிக்கு கடந்த ஆண்டும் மிக சிறப்பாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் இந்த ஆண்டும் பெங்களூரு அணிக்கே விளையாட போகிறார். கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வரை இந்த ஆண்டு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது.சமீபத்தில் விராட்கோலி சம்பந்தமாக பேசியுள்ள அவர் கோலி குறித்து ஒரு சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் விராட்கோலி ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கி தவித்து வந்தார். அவரை ஏதோ ஒன்று தடுத்தது. இனி அந்த பிரச்சினை கிடையாது. சர்வதேச போட்டியிலும் ஐபிஎல் போட்டியிலும் இனி அவர் கேப்டன் கிடையாது. ஆகவே எந்தவித அழுத்தமின்றி கூலாக இனி அவர் முன்பு போல விளையாடலாம்.

- Advertisement -

மீண்டும் பழைய ட்ராக்கில் அவர் வந்துவிட்டால் எதிரணி வீரர்களுக்கு தான் மிகப்பெரிய பிரச்சனை. அவர் முன்பு போல விளையாட தொடங்கிவிட்டாலே எதிரணி வீரர்களுக்கு மிகப் பெரிய தலைவலி தான். இனிவரும் நாட்களில் பழைய விராட் கோலியை நாம் தாராளமாக பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்லா விஷயத்திலும் அளவோடு இருக்கிறார்

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அதை கட்டுப்படுத்தும் விதத்திலும் விராட் கோலி நிறைய மாறி இருக்கிறார். எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவோடு விராட் கோலி காணப்படுகிறார். நான் அவரை கடந்த ஆண்டு முதல் பார்த்து வருகிறேன். அதேபோன்று முடிவெடுக்கும் விஷயத்திலும் சரி அவர் சரியான அளவிலேயே முடிவுகளையும் எடுக்கிறார். இறுதியாக அவர் எப்பொழுதும் என்னை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறார் என்றும் அவருடன் இணைந்து இந்த ஆண்டு விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் கூறி முடித்தார்.