இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதன் காரணமாக இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்கி இருக்கிறது.
மீண்டும் டாஸ் சோகம்
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்வது கண்டிஷன் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து கேப்டன் கில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் கில் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் மிகவும் தடுமாறி பொறுமையாக விளையாடினார். நெருக்கடி அளிக்கும் விதமாக ஹேசில்வுட் தொடர்ந்து ஏழு ஓவர்கள் பந்து வீசினார்.
விராட் கோலி செய்த காரியம்
இந்த நிலையில் கேப்டன் கில் ஆட்டமிழந்த அதே ஓவரில் டார்ச் லைட் பந்துவீச்சில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கடந்த போட்டியிலும் டக் அவுட் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்.
மேலும் தற்போது போட்டி நடைபெற்று வரும் அடிலைட் மைதானத்தில் விராட் கோலிக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக டக் அவுட் ஆன பொழுதிலும் அவர் ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வெளியேறி மரியாதை செலுத்தியது தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மோசமான சாதனை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : 2027 உலக கோப்பை பிளான் ரெடி.. விராட் ரோஹித் கிட்ட இந்த விஷயத்தை மட்டும் பார்த்தா போதும் – அஸ்வின் பேட்டி
43- ஜாகீர் கான்
40- விராட் கோலி
40-இஷாந்த் சர்மா
37- ஹர்பஜன் சிங்
35-ஜஸ்பிரித் பும்ரா
35- அனில் கும்ப்ளே
34- ரோஹித் சர்மா
34- சச்சின் டெண்டுல்கர்






