கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

விராட் கோலி அகர்கர் கையில்.. 21 வயது இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை.. என்ன நடக்க போகிறது?

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய அடுத்த நாளில், டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மாவை தங்களின் கேப்டன் என பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

எனவே ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்டிங் யூனிட்டில் துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் தற்பொழுது முடிவாகி இருக்கிறது. இதன் காரணமாக துவக்க இடத்தில் ஒரு இடத்தை அவர் நிரப்பி விட்டார். இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதி.

இந்த நிலையில் இன்னொரு இந்திய நட்சத்திர மூத்த பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி அடுத்து வருகின்ற டி20 உலகக்கோப்பை குறித்து என்ன முடிவு எடுக்கிறார்? என்று இதுவரை தெரியவில்லை.

மேலும் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு, விராட் கோலி டி20 உலக கோப்பையில் விளையாடுவது குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள்? என்பது குறித்தும் தெரியவில்லை.

- Advertisement -

தற்போதைய நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்த டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என்றால் இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மற்ற இளம் வீரர்களான ருதுராஜ், சுப்மன் கில், திலக் வர்மா ஆகியோர் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் இருவரது இடமும் ரோகித் சர்மா வருகையை பொறுத்து இருக்கிறது.

அதே சமயத்தில் 21 வயதான திலக் வர்மாவின் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் என்பது விராட் கோலியின் வருகையை பொறுத்து இருக்கிறது.

தற்பொழுது இந்த இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் உலகக்கோப்பை கனவு விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரது கைகளில்தான் இருக்கிறது. என்ன நடக்கிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

- Advertisement -
Published by

Recent Posts