வீடியோ.. இப்படியும் ஆடுவியாப்பா?.. மேக்ஸ்வெல்லா மாறிய ரிங்கு சிங்.. மிரட்டல் அடி!

0
6243
Rinku

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கேப்டன் பனிப்பொழிவின் காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்திய அணி இந்தத் தொடரில் இத்தோடு மூன்றாவது முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜெய்ஸ்வால் 37(28), ருத்ராஜ் 32(28) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இந்த ஆட்டத்தில் இஷான் கிசானுக்கு பதிலாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 8(7), கேப்டன் சூரியகுமார் யாதவ் 1(2) ரன்கள் எடுத்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் திலக் வர்மா இல்லாத காரணத்தினால் முன்கூட்டியே வந்த ரிங்கு சிங் வழக்கம்போல் ஆச்சரியப்படுத்தும் விதமாக விளையாடினார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே பவுண்டரி உடன் ஆரம்பித்தார்.

ரிங்கு சிங் புதிதாக களத்திற்கு வந்த காரணத்தினால் இரண்டு பக்கத்திலும் ஆப் ஸ்பின்னர்களை ஆஸ்திரேலிய கேப்டன் கொண்டு வந்தார். அது தனக்காக வகுக்கப்பட்ட வியூகம் என்பதை ரிங்கு சிங் புரிந்து கொண்டார்.

- Advertisement -

இதன் காரணத்தினால் ஆப் ஸ்பின்னர் மேத்யூ ஷார்ட் வீசிய ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் மேக்ஸ்வெல் போல அனாயசமாக சிக்ஸர் அடித்து, ஆஸ்திரேலியா கேப்டனின் வியூகத்தை உடைத்தார்.

அவர் இப்படியான ஷாட்கள் விளையாடுவார் என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. கேப்டன் சூரியகுமார் யாதவ் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 174 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 46(29), விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 35(19) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மைதானம் பெரிது என்கின்ற காரணத்தினால் இந்த ரன்களை வைத்து இந்திய அணியால் போராட முடியுமா என்று பார்ப்போம்!