வீடியோ; ” எங்களுக்கு தோனி வேண்டும்!” – வான்கடே மைதானத்தை அதிர வைத்த ரசிகர்கள் கோசம்!

0
452
Dhoni

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி இரண்டு கோப்பைகளைக் கைப்பற்றிய பிறகு, சென்னை அணியுடன் அந்த அணி விளையாடும் எல்லா போட்டிகளும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளாக மாறிப் போயின.

இதற்கு முக்கிய காரணம் நான்கு முறை இறுதிப் போட்டியில் மும்பை அணி சென்னையை வென்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஒருமுறை மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக மட்டும் இருந்த புனே அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இதனால் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகளுக்கு இரு அணி ரசிகர்கள் தாண்டி வெளியிலும் மற்ற ரசிகர்கள் இடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்தது. அது இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ஆயிரமாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி அபாரமாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங், பீல்டிங் என கலக்கி மும்பை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது மூன்றாவது விக்கெட்டாக குமார் கார்த்திகேயா பந்துவீச்சில் சிவம் துபே ஆட்டம் இழந்தார். அப்பொழுது ஏறக்குறைய சென்னை அணி வெற்றியை எட்டி விட்டது. இதற்கு அடுத்து அம்பதி ராயுடு விளையாட வந்தார்.

இந்த நேரத்தில் சிவம் துபே ஆட்டம் இழந்ததும் “வி வாண்ட் தோனி ” என்று ரசிகர்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்தார்கள். ரசிகர்களின் பரவலான இந்த கோசத்தால் மும்பை வான்கடே மைதானம் சேப்பாக்கம் மைதானம் போல் காட்சி அளித்தது. இந்த இடைப்பட்ட சில நொடிகளில் வான்கடே மைதானம் அதிர்ந்தது என்றே சொல்லலாம். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஆண்டுக்கு ஆண்டு அவர்களது செல்வாக்கு ரசிகர்களிடையே குறைந்து வரும். ஆனால் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒவ்வொரு ஆண்டும் அவரது புகழ் மேலும் மேலும் உயர்ந்துதான் வருகிறது. சச்சினுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் புகழோடு விளங்கக்கூடியவராக தோனி இருக்கிறார்!

- Advertisement -