வீடியோ.. சச்சினை தாண்டி உலக சாதனையோடு ஆரம்பித்த வார்னர்.. அசால்டாக அனுப்பி வைத்த குல்தீப்!

0
353
Kuldeep

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று மிகப்பெரிய போட்டியான இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானம் நிரம்பி இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாசை இழந்தார். டாசை வென்ற பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தான். வெயிலில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியாக தான் இது தெரிந்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் வறட்சியாக காணப்பட்டது. ஒரு பக்கம் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு பேட்டிங் செய்ய சுலபமாக இருக்கும் என்றும், இரண்டாவது பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த முறை ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மிட்சல் மார்சை நீண்ட நேரம் விட்டு வைக்கவில்லை. மூன்றாவது ஓவரில் ஸ்லீப்பில் விராட் கோலியை வைத்து அவரை காலி செய்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு அடித்தளத்தை கொடுப்பதற்காக விளையாடினார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் அரை சதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்தார்கள். பந்தைக் காற்றில் தூக்கி வீசாமல் பிளாட்டாக வீசி கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் குல்தீப் யாதவ் சுதாரித்து தனது மூன்றாவது ஓவரில் பந்தை காற்றில் தூக்கி வீச ஆரம்பித்தார். வார்னர் டைமிங் தவற விட்டு, பந்தை நேராக அடிக்க, குல்தீப் யாதவ் அதைப் பிடித்து வார்னரை (41) வெளியேற்றி வைத்தார்.

இந்தப் போட்டியில் வார்னர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் அடித்திருக்கிறார். சச்சின் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் 20 இன்னிங்ஸ்களில் அடித்து இருந்தார்கள்.