வீடியோ; முதல் ஓவரிலேயே டபுள் செக் வைத்து ஹைதராபாத்தை அதிர்ச்சியாக்கிய ட்ரெண்ட் போல்ட்!

0
86
Boult

16ஆவது ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தற்பொழுது நடந்து வருகிறது!

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற தற்காலிக ஹைதராபாத் கேப்டன் புவனேஸ்வர் குமார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

இருவரும் ஆரம்பத்தில் இருந்தே ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியில் இறங்கினார்கள். முதலில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பாய, இதற்கு அடுத்து அனுபவ வீரர் பட்லர் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை வதைத்து விட்டார்.

ஹைதராபாத் அணிக்கு பட்லர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் மூவரும் அரை சதம் அடித்துக் கொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்தது. ஹைதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே டபுள் செக் வைத்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்தார் ராஜஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட். மூன்றாவது பந்தில் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை கிளீன் போல்ட் ஆக்கிய அவர் அடுத்து ராகுல் திரிபாதியை ஸ்லீப்பில் ஹோல்டர் மூலம் வெளியேற்றினார். ரன் கணக்கை துவங்குவதற்கு முன்னாலே ஹைதராபாத் அணி மிகப்பெரிய இலக்கை துரத்தும் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2020 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ட்ரென்ட் போல்ட் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார்.

ட்ரெண்ட் போல்ட் 17
ஜோப்ரா ஆர்ச்சர் 5
முகேஷ் சௌத்ரி 5
தீபக் சகர் 4
முகமது சாமி 4
உமேஷ் யாதவ் 4

- Advertisement -

தற்பொழுது ஹைதராபாத் அணி இந்த வருடம் மினி ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கிய இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி புரூக் விக்கெட்டை சாகலிடம் பறிகொடுத்து 7.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து பரிதாப நிலையில் இருக்கிறது!