கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியின் இளம் இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி படுமோசமான காயங்களுக்கு உள்ளானார்.
இதற்குப் பின்னால் அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அவர் மருத்துவர்களின் மேற்பார்வையில் வீட்டிலிருந்து சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொண்டு மெல்ல மெல்ல மீண்டு வந்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதம் பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய கிரிக்கெட் பயிற்சிகளில் இனி ரிஷப் பண்ட் பெங்களூர் வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வரும் பந்துகளை எதிர் கொண்டு ரிஷப் பண்ட் விளையாட ஆரம்பித்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அதே சமயத்தில் பந்தை வலிமை கொண்டு விளையாடும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகவில்லை கொஞ்சம் காலம் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் இந்த தெளிவான அறிக்கைகளால் ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பதற்கான சந்தேகங்கள் தீர்ந்து தெளிவாகியது.
இந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து ரிஷப் பண்ட் நேற்று சுதந்திர தினத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் முதல்முறையாக பேட்டிங் செய்ய வந்து, தன்னுடைய கலக்கலான அதிரடி பாணியில் பேட்டிங் செய்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.
இதற்கான காணொளி தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதில் அவர் பேட் செய்யும் பொழுது ரசிகர்கள் அவரை மீண்டும் பழையபடி பார்த்த காரணத்தால் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவது மிகத் தெளிவாக தெரிகிறது. இதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எப்பொழுது திரும்புவார் என்று பார்த்தால், பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரும்புவார் என்று நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. அவர் சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது!
Rishabh Pant is back on the ground, he is batting in a match on Independence Day – This video & visuals will bring happiness in everyone's face.
— CricketMAN2 (@ImTanujSingh) August 16, 2023
Video of the day! pic.twitter.com/PW0GnoCYCd