வீடியோ.. எனக்காக ஸ்கெட்ச்? பாண்டியாவுக்கு அசத்தலான பிறந்தநாள் பரிசு கொடுத்த சர்துல் தாகூர்..!

0
579
Hardik

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான அணியை சந்தித்து விளையாடி வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தைரியமாக தேர்வு செய்தது. டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதே அணி தொடர்கிறது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் கொண்டுவரப்பட்டார்.

இந்த மாற்றம் சமூக வலைதளத்தில் பல கடுமையான விமர்சனங்களை கொண்டு வந்தது. அஸ்வினை தொடர்ந்திருக்க வேண்டும் இல்லை முகமது சமியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்று பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

வழக்கம்போல் இந்த நிலையிலும் தன்னுடைய தேர்வு தவறு கிடையாது என்கின்ற வகையில் சர்துல் தாகூர் செயல்பாடு அமைந்திருக்கிறது. ஒரு அபார கேட்ச் மற்றும் ஒரு விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் விக்கெட்டை விக்கெட் கீப்பர் கேஎல்.ராகுல் மூலம் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார். இன்னொரு முனையில் அபாயகரமான துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் இருந்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சுக்கு வந்து ஒரு ஷார்ட்பால் குர்பாஸ்க்கு வீச, அதை அவர் தூக்கி அடிக்க எல்லை கோட்டுக்கு பக்கம் காற்றில் பந்து சென்றது, அதை முனையில் இருந்து பிடித்த சர்துல், அபாரமாக அதை தூக்கி வெளியில் எறிந்து, மீண்டும் அதைப் பிடித்து கேட்ச் செய்தார்.

அதே வேளையில் பந்து வீச்சுக்கு வந்த சர்துல் தாக்கூர் ரஹமத் ஷா விக்கெட்டை மிகச் சிறப்பாக எல்பிடபிள்யு மூலம் வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து இருக்கிறார். மேலும் தன் தேர்வு குறித்து பதிலடியையும் பலருக்கு தந்திருக்கிறார்!