இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் கடந்த முன் ஆண்டிற்கு முன் இரண்டு ஆண்டுகள், மும்பை மாநில அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் டன் கணக்கில் ரன்கள் குவித்திருக்கிறார்.
இதில் சதத்தில் ஆரம்பித்து இரட்டை சதம், முச்சதம் என சதங்கள் அவருக்கு வரிசை கட்டி நின்றன. பங்களாதேஷுக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சென்ற இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரகானேவுக்கு கூட அணியில் இடம் கிடைத்தது. சர்ப்ராஸ்கானுக்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும் அவருக்கு வாய்ப்பு தராத பொழுதிலும் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் திரும்பி அதிரடியாக சதங்கள் குவிக்க ஆரம்பித்தார். அப்பொழுது அவரது அணியின் பயிற்சியாளரும் அவரும் சேர்ந்து கொண்டாடியதை, ஒழுக்கம் மீறல் என்று கூறி தேர்ந்தெடுக்காததற்கு பிசிசிஐ காரணம் சொன்னது.
இதனால் சர்பராஸ் கான் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் தற்பொழுது தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய ஏ அணியில் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திடீரென அவர் மீண்டும் இந்திய ஏ அணிக்கு அழைக்கப்பட்டார்.
தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, அதற்கான பயிற்சியாக, தங்களுக்குள்ளே அணிகளைப் பிரித்துக் கொண்டு விளையாடி வருகிறது.
இந்த பயிற்சி போட்டியில் அதிரடியாக சர்ப்ராஸ்கான் இந்திய பந்துவீச்சாளர்களை நொறுக்கி தள்ளி வழக்கம்போல் 61 பந்தில் சதம் அடித்திருக்கிறார். வீடியோவில் அவரது பேட்டிங் அணுகுமுறையை பார்க்கும் பொழுது, அதிரடியிலும் துல்லியம் தெரிகிறது.
மேலும் கையில் காயம் அடைந்திருக்கும், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் ருத்ராஜ் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். எனவே சர்ப்ராஸ் கானுக்கு முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Sarfaraz khan 63 ball 100 in India intersquad match. pic.twitter.com/dvoM6VI8Bu
— Varun Giri (@Varungiri0) December 22, 2023