வீடியோ.. கெளம்பு கெளம்பு.. தோத்த சூப்பர் கிங்ஸை பங்கம் செய்த பொல்லார்ட்.. காலில் விழுந்த பிராவோ!

0
1079
MLC2023

தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கியுள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நான்கு அணி நிர்வாகங்களும் அணிகளை வாங்கி இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணியில் இருந்து விலகி அதே சமயத்தில் அந்த அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பிராவோ மற்றும் பொல்லார்ட் இருவரும் இந்த அமெரிக்க தொடரில் மும்பை மற்றும் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார்கள்.

- Advertisement -

இன்று இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் பாப் டு பிளிசிஸ் தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் பலப்பரிட்சை நடத்தினர்.

டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 158 ரன்கள் சேர்த்து 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் தரப்பில் மிக அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த இரு போட்டிகளாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கான பிளே ஆப் சுற்றில் தன்னுடைய பரம எதிரியான சூப்பர் கிங்ஸ் அணியைத் தோற்கடித்ததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்ட் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார். அதே சமயத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராவோ எப்பொழுதும் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றாலோ அல்லது பொல்லார்ட் விக்கெட்டை வீழ்த்தினாலோ விமானம் ஏறி நாட்டுக்கு போகலாம் என்கின்ற மாதிரி வெற்றி கொண்டாட்டத்தை நகைச்சுவையாக செய்வார்.

இன்று பிராவோவுக்கு எதிராக பிராவோ செய்யும் வெற்றி கொண்டாட்டத்தை பொல்லார்ட் செய்து கலகலப்பை கூட்டினார். திருப்பி பதிலுக்கு பிராவோ “ஓகே ஓகே என்னை விட்டுரு” என்பது போல் பொல்லார்ட் காலில் விழுவது போல செய்தார். இந்த கலகலப்பான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!