இப்படி கூட சிக்ஸ் அடிக்கலாமா… ஜோ ரூட் அடித்த விசித்திரமான ரிவர்ஸ் ஸ்கூப் சிக்ஸர் வீடியோ!

0
3224

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட் களை இழந்திருந்தது .

முன்னதாக தனது முதல் எண்ணின் செய் ஆடியோ ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 316 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது . நேற்று மூன்றாம் நாளை தொடர்ந்து ஆடிய அந்த அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து தனது இரண்டாவது இன்சை தொடங்கியது .

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தின் பிற்பகுதியை மழையால் தடைப்பட்டது . இங்கிலாந்து அணி 24 ரன்களுக்கு விக்கெட்டுகள் எதுவும் விளக்காமல் இருக்கும்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது . இதனைத் தொடர்ந்து சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் இரண்டு துவக்க வீரர்களையும் இழந்தது இங்கிலாந்து . இதனால் நேற்றைய ஆட்டு நேர முடிவில் 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட் களை இழந்திருந்தது .

இன்றைய நாளை துவக்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துவங்கியது இன்றைய நாளில் வீசப்பட்ட முதல் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் அடிக்க முயன்றார் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் . அந்தப் பந்து அவருக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவரை வீசிய பார்ட் போலாண்ட் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் இருக்கு விரட்டினார் ஜோ ரூட் .

- Advertisement -

போட்டிகளில் எத்தனையோ சித்தர்களை பார்த்திருந்தாலும் ஒரு நாள் தொடக்கத்தின் இரண்டாவது ஓவரிலேயே இது போன்ற அதிரடியான ஷாட்களை ஆடியது ரசிகர்களையும் கிரிக்கெட் விமர்சேகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . பாரம்பரியமான டெஸ்ட் பேட்டிங் இருக்கு பெயர் போன இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தற்போதைய அவர்களின் பஸ் பால் அணுகுமுறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடியுடன் ஆடி வருகிறார் .

கடந்த சில காலமாகவே ரிவர்ஸ் ஸ்கூப் மூலம் சிக்ஸர் அடிப்பதை வளமையாக கொண்டிருக்கிறார் . இன்றைய நாள் ஆட்டத்தின் போதும் அவர் ஸ்காட் போலான்டின் பந்துவீச்சில் அது போன்ற ஒரு அசாதாரணமான சாட்டின் மூலம் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ஜோ ரூட் 152 பந்துகளில் 118 ரண்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்தப் போட்டியில் இவர் அடித்த நான்கு சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் ரிவர்ஸ்  ஸ்கூப் முறையில் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -