இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது . ஆட்டத்தின் துவக்கத்திலேயே உஸ்மான் கவஜா விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார் முஹம்மது சிராஜ். இதனைத் தொடர்ந்து இணைந்த டேவிட் வார்னர் மற்றும் லபுசேன் ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட் விழாமல் பொறுப்புடன் ஆடினர் .
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத டேவிட் வார்னர் இந்தப் போட்டியில் சிறப்பாகவும் நிதானத்துடனும் விளையாடினார் . தேவைப்படும்போது பௌண்டரிகளை எடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார்.
ஆனால் உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக தாக்கூர் வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் விளையாட முயன்ற போது அவரது கிளவுஸில் பட்டு விக்கெட் கீப்பர் பரத்தின் கைகளில் தஞ்சமடைந்தது பந்து . இதன் மூலம் சிறப்பாக ஆடி வந்த வார்னரின் விக்கெட் வீழ்ந்தது
வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதில் எட்டு பவுண்டரிகள் அடங்கும் . இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளைக்கு சென்றது . உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தை துவக்கிய முதல் பந்திலேயே மார்னஸ் லபுசேன் விக்கெட்டை கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார் முஹம்மது சமி. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி என்பது ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .
துவக்கத்தில் ஒரு விக்கெட் இழந்தாலும் வார்னர் மற்றும் லபுசேன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர் . ஆனால் எதிர்பாராத விதமாக டேவிட் வார்னரின் விக்கெட் விழ அதனைத் தொடர்ந்து மரணச் ஆட்டம் இழந்தார் . இதனால் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது .
தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் களத்தில் உள்ளனர் ஸ்மித் 12 ரன்கள்டனும் டிராவஸ் ஹெட் 13 ரன்கள்டனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர் . ஆஸ்திரேலியா அணி 97 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது . இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி,முகமது சிராஜ் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் .
முகமது சமியின் வேகத்தில் புல்லர் லென்த் வீசப்பட்ட பந்து மார்னஸ் லபுசேன் ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதன் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது .
SHAMMMIIIIIII 🔥
— Gøwtham (@Gowthiss) June 7, 2023
What a delivery to get the wicket of Labuschagne 💥 #WTCFinal2023 | #WTCFinal | #INDvsAUS | #shami pic.twitter.com/qFLy9qDPY0