வீடியோ; ஐபிஎல் 16வது சீசன் முதல் விக்கட்டை நூறாவது விக்கெட்டாக பதிவு செய்த முகமது சமி!

0
178
Shami

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று அகமதாபாத் பைதானத்தில் குஜராத் சென்னை அணிகளுக்கு இடையே கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். குஜராத் அணி வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான அகமதாபாத் பைதானத்தில் முகமது சமி, ஹர்திக் பாண்டியா, யாஷ் தயால், ஜோஸ் லிட்டில், அல்ஜாரி ஜோசப் என சவாலான வேகப்பந்துவீச்சு படையை வைத்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணியில் தீபக் சகர் மற்றும் அறிமுக வீரராக ராஜ்யவர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். இம்பேக்ட் பிளேயர் விதியில் இன்னும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வருவது திட்டமாக இருக்கலாம்.

இந்த நிலையில் போட்டி தொடங்கியதும் முதல் ஓவரை முகமது சமி வீச அந்த ஓவரில் சென்னை அணிக்கு இரண்டு ரன்கள் வந்தது. இதற்கு அடுத்த ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் ருத்ராஜ் விளாச சென்னை அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.

இதற்கு அடுத்து மூன்றாவது ஓவருக்கு வந்த முகமது சமி ருதுராஜ்க்கு ஒரு சிங்கிள் தந்து அனுப்பிவிட்டு, அடுத்து பேட்டிங் செய்ய வந்த கான்வோவை இரண்டு ஸ்டெம்புகள் சிதற, தனது அப்ரைட் சீம் டெலிவரியில் அட்டகாசமாக வெளியேற்றினார்.

- Advertisement -

கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இருந்து ஏலத்தில் குஜராத் அணிக்கு வாங்கப்பட்ட முகமது சாமி அபாரமாக பந்து வீசி 16 போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்த அவரது ஐபிஎல் வரலாற்றில் கடந்த சீசன் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

ஒன்பது ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருந்த முகமது சமி 93 போட்டிகளில் 93 இன்னிங்ஸ்களில் இதுவரை 99 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். இன்று முகமது சமி கான்வோ விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது நூறாவது விக்கட்டை பதிவு செய்தார்.

- Advertisement -