வீடியோ.. 303* ரன் அடித்தும் இந்திய அணியில் வாய்ப்பில்லை.. இங்கிலாந்தில் கருண் நாயர் அசத்தல் சதம்!

0
1620
Karun

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஷ்டமான வீரர்களின் பட்டியலில் மிக முக்கியமான இடம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் கருண் நாயருக்கு உண்டு!

2016 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி தலைமையில் இந்திய அணிக்காக ஆட்டம் இழக்காமல் கருண் நாயர் 33 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆனால் அவர் மொத்தமாக இந்திய அணிக்கு விளையாடியது ஆறு டெஸ்ட் போட்டிகளில் 7 இன்னிங்ஸ்கள்தான். அவருடைய இடம் ரகானேவால் நிரப்பப்பட, அதற்குப் பிறகு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை.

கடைசி ரஞ்சி சீசன் வரை கர்நாடக மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த கருண் நாயர் தற்பொழுது விதர்பா அணிக்கு மாற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கர்நாடக அணிக்காக 2013 மற்றும் 14ஆம் ஆண்டில் ரஞ்சி கிரிக்கெட்டில் கருண் நாயர் அறிமுகமானார். அவருக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று அருமையான ரஞ்சி சீசன்கள் அமைந்தது. தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி இறுதிப் போட்டியில் முச்சதம் அடித்து அந்த அணியை வெல்ல வைத்தார். இதன் காரணமாகவே அவருக்கு இந்திய அணியலும் இடம் கிடைத்தது.

- Advertisement -

தற்பொழுது கருண் நாயர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்முறையாக இந்த முறைதான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் 184 பந்துகளை சந்தித்து அபாரமான சதம் ஒன்றை அடித்திருக்கிறார். இதில் சதம் அடிப்பதற்கான பந்தை, அவர் ரேம் ஷாட் மூலம் விளையாடி சதத்திற்கான ரன்னை கொண்டு வந்திருக்கிறார். இது அவருக்கு கவுண்டி கிரிக்கெட்டில் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்களை தொட்டிருக்கிறார்!

தற்பொழுது இந்திய இளம் வீரர்கள் பல பேர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய அணிக்குள் நுழைவதற்கான போட்டி மிக அதிகமாக இருப்பது ஒரு காரணம், மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே வெளிநாடுகள் நடக்கும் லீக்குகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.