இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் நாட்டில்அந்த அணிக்கு எதிராக விளையாடியது.
தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடர் முடிந்து பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் இருக்கும் பொழுது டிம் சவுதி வழி நடத்தி வருகிறார். மேலும் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சியால்கட் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி அபாரமான முறையில் நியூசிலாந்து அணியை வென்று, தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியை விட முன்னணியில் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று மிர்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.
பங்களாதேஷ் அணியின் முதல் நான்கு விக்கெட்டுகள் 47 ரன்களுக்கு விழுந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பிங் மூத்த பேட்ஸ்மேன் முஸ்பிக்யூர் ரஹீம் பேட்டிங் செய்ய வந்தார்.
இவர் சகாதத் ஹுசைன் உடன் சேர்ந்து அரை சதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை கொஞ்சமாக மீட்டு வந்தார். இப்படியான நிலையில்தான் கைல் ஜெமிசன் பந்து வீச்சில் காமெடியான முறையில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு சரிவை உண்டாக்கி இருக்கிறார்.
ஜெமிஷன் வீசிய பந்தை பேட்டில் தடுக்க, பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை விட்டு வேறெங்கோ சென்றது, இந்த நிலையில் பந்தை தடுக்கிறேன் என்று தேவையில்லாமல் ரஹீம் கையை வைத்து தள்ளிவிட்டார். பந்தின் இயக்கம் முடிவடையாத பொழுது, பேட்ஸ்மேன் பந்தை கையில் தொட்டால் அவுட் என்பது விதி. இந்த நிலையில் எங்கோ செல்லும் பந்தை தேவையில்லாமல் கையில் தடுத்து ஆட்டம் இழந்து விட்டார். இதில் பரிதாபத்தை விட நகைச்சுவையே அதிகமாக இருந்தது.
அணியில் மிக மூத்த வீரர், அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கையால் தடுத்து ஆட்டம் இழந்தது பெரிய விமர்சனத்தை கொண்டு வந்திருக்கிறது. மேலும் இதுமட்டும் இல்லாமல் இவர் ஆட்டம் இழந்ததும், பங்களாதேஷ் அணி 149 ரன்களுக்கு தற்பொழுது 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mushfiqur Rahim out for obstructing the field.
— Johns. (@CricCrazyJohns) December 6, 2023
– He is the first Bangladesh batter to dismiss by this way in cricket history.pic.twitter.com/MfZONDzswk