வீடியோ; களத்தில் நேரடியாக மோதிக்கொண்ட விராட் கோலி – மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்!

0
829
Viratkohli

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்து தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது!

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று, தொடர் சமநிலையில் இருக்கின்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகப் பரபரப்பாக தற்பொழுது நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். கடந்த ஆட்டத்தைப் போலவே அதிரடியான துவக்கத்தை தந்த ஹெட் மற்றும் மார்ஷ் முதல் விக்கட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தார்கள்.

10 ஓவர் வரை மிகச் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியை, பதினோராவது ஓவருக்கு வந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய நெருக்கடியில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தள்ளிவிட்டார். ஹெட், ஸ்மித், மார்ஷ் மூன்று முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து தூக்கி ஆஸ்திரேலியா அணியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்ஷ் 47 ரன்கள் எடுக்க, 49 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்கு 270 ரன்கள் எடுத்தால் தொடரை வெல்ல முடியும் என்ற எல்லைக்கோட்டை வரைந்தது!

இந்த நிலையில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்த முறை கொஞ்சம் பொறுப்பாக விளையாடி இருவரும் முப்பது ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஜோடி மிக பொறுமையாக விளையாடி அதே சமயத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் 21வது ஓவரை வீச வந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அந்த ஓவர் பந்துவீச்சின் போது விராட் கோலி இடம் வார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த ஓவரில் விராட் கோலி பந்தை ஆடிவிட்டு ரன் எடுப்பதற்காக ஓடிவரும் பொழுது, விராட் கோலியை இடிப்பது போலவும், அதே சமயத்தில் அவரை பார்க்காதது போலவும் வேண்டுமென்றே அவர் வர, ஏற்கனவே கடுப்பில் இருந்த விராட் கோலியை இது மேலும் கடுப்பாக்க, விராட் கோலி அவரை நேருக்கு நேராக மோதினார். இதனால் அங்கு சற்று நேரம் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கே எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஆட்டமிழக்க, தற்பொழுது ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து, அரை சதம் தாண்டி விராட் கோலி விளையாடி வருகிறார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!