வீடியோ.. நல்லவேளை.. தர்மசாலா உலக கோப்பை மைதானத்தை விமர்சித்த ஆப்கானிஸ்தான் கோச் மற்றும் மேத்யூ ஹேடன்.!

0
6598

13 வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணி வெற்றி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

மேலும் நேற்று போட்டி நடைபெற்ற தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தின் அவுட் ஃபீல்டு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்றைய போட்டியின் முப்பதாவது ஓவரில் சகிப் அல் ஹசன் அடித்த பந்தை பிடிக்கச் சென்ற பங்களாதேஷ் அணியின் வீரர் முஜிபுர் ரஹ்மானின் முட்டி வெளிப்புற ஆடுகளத்தில் சிக்கி அவருக்கு காயம் ஏற்பட்டது. இது நேற்றைய போட்டியின் போது மிகப்பெரிய சர்ச்சையையும் குற்றச்சாட்டையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பங்களாதேஷ் அணி பில்டிங் செய்த போது வர்ணனையாளர்களாக பணியாற்றிய நாசிர் ஹுசைன் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புற ஆடுகளத்தை அருகில் இருந்த ஒரு சிறிய மைதானத்தின் அவுட்ஃபில்டோடு ஒப்பிட்டு பேசி கிண்டல் செய்தனர். இரண்டு மைதானங்களில் வெளிப்புற ஆடுகளங்கள் ஒரே மாதிரி இருப்பதாக நேற்றைய போட்டியின் நேரலையின் போது கிண்டல் செய்தனர்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டிக்கு பின் கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ” நேற்றைய போட்டியில் எங்களின் வீரர் முஜிபுர் ரகுமான் மிகப்பெரிய காயம் ஏற்படுவதில் இருந்து தப்பி இருக்கிறார். ஏற்கனவே இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் கான்வே மிகப்பெரிய காயத்தில் இருந்து தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டி அமைப்பாளர்கள் இது போன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தோற்றதால் இதை ஒரு காரணமாக கூறவில்லை. ஆடுகளத்தில் வீரர்களின் பாதுகாப்பு அவசியம்” என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன்” சில வீரர்களுக்கு இது எளிதாக இல்லை. நாங்கள் சிறப்பாக பந்துவீசி பெட்டிங்கும் செய்தோம். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது . இது போன்ற ஆடுகளில்தான் நாம் பயிற்சி செய்து வருகிறோம். எனவே ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.

தனது கேப்டனின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசி இருக்கும் போட்டியின் ஆட்டநாயகன் மகதி ஹசன்” இந்த ஆடுகளத்தில் அவுட்ஃபீல்டு சற்று கடினமாக இருந்தது. பந்துகள் வேகமாக செல்லவில்லை. அதற்காக நாம் அவற்றை குறை சொல்லக்கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்தார். தர்மசாலா ஆடுகளத்தின் அவுட்ஃபீல்டு சர்ச்சைக்கு உள்ளாவதே இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் இங்கு நடைபெறுவதாக இருந்த டெஸ்ட் போட்டி அவுட்ஃபீல்டு பிரச்சனை காரணமாக மாற்றி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -