இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களையும் வைத்து வதம் செய்து விட்டார்.
துவக்க வீரராகக் களம் கண்ட அவர் 26 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து, 48 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். அத்தோடு நிற்காமல் மேற்கொண்டு 14 பந்துகளை சந்தித்து, மொத்தமாக 62 பந்துகளில் 137 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதில் அவர் மொத்தமாக 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்து, இன்னொரு பக்கமாக 16 சிக்ஸர்கள் நொறுக்கி, நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாற்றி இருக்கிறார்.
அவரின் இந்த இன்னிங்ஸ் மூலம் குறிப்பிட்ட இரண்டு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு பங்களாதேஷ் அணிக்காக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் 128 ரன்கள் அடித்ததே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்பொழுது இதை முறியடித்து நியூசிலாந்து ரெக்கார்டு படைத்திருக்கிறார்.
அடுத்து ஆப்கானிஸ்தானின் ஹசரத்துல்லா ஷசாய் 2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் அடித்தது உலக சாதனையாக இருந்தது. இந்த இன்னிங்ஸ் மூலமாக பின் ஆலன் இந்த உலகச் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டியில் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6,4,4,6,6,1 என 27 ரன்கள் நொறுக்கினார். இதே தொடரில் முதல் போட்டியில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6,4,4,4,6 என 22 ரன்கள் நொறுக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளையும் நியூசிலாந்து அணியை வென்று இருந்தது. இன்றைய போட்டியை வென்றதால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் நியூசிலாந்து அணி வென்று இருக்கிறது.
Finn Allen 16 sixes vs Pakistan today. 🫡#NZvPAK#Pakistan#tuesdayvibe pic.twitter.com/xpT9rVz3gg
— KIRAN 'NTR' (@NTRcult4ever) January 17, 2024