வீடியோ.. பவுண்டரி லைன்.. பேக் டைவ்.. இந்த வருடத்தின் சிறந்த கேச்சை பிடித்தார் வில் யங்!

0
194
Young

இன்று பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நியூசிலாந்து டண்டின் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு வில் யங் அதிரடியாக 84 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டாம் லாதம் 77 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்

- Advertisement -

மழையின் காரணமாக 30 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது.

பங்களாதேஷ் அணிக்கு 30 ஓவர்களில் 245 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அனாமுல் ஹக் மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து வேறு யாரும் 40 ரன்கள் தொடவே இல்லை.

எனவே 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட் இழந்திருந்த பொழுது பேட்டிங் செய்து கொண்டு இருந்த சோரிபுல் இஸ்லாம் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே வீசிய பந்தை, ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்தார்.

அங்கு பவுண்டரி லைனில் பீல்டிங் நின்றிருந்த வில் யங் பந்தை கொஞ்சம் தவறாகக் கணித்து முன்னால் வந்து விட்டார். ஆனால் பந்து தன் தலையை தாண்டி பின்னால் செல்வதை அவர் உடனே உணர்ந்து கொண்டார்.

இதையடுத்து அவர் பின்னோக்கி டைவ் செய்து ஒற்றைக் கையால் பந்தை அபாரமாக பிடித்தார். இப்படி பின்னோக்கி டைப் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். மேலும் ஒற்றைக் கையாளும் கேட்ச்சை எடுத்தார்.

ஆனால் இந்த கேட்சில் இதைவிட பிரமாதமான இன்னொரு விஷயம், பவுண்டரி லைனை ஒட்டி விழுந்த அவர், அந்த மணித்துளிகளில் கூட மிகுந்த கவனத்தோடு, பவுண்டரி கயிற்றை தொடாமல் லாவகமாக நகரத்தினார். இது மிகுந்த ஆச்சரியத்தை உண்டு செய்தது.

ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்சுகளில் இதற்கு இடம் உண்டு. அதேபோல் இந்த வருஷம் பிடிக்கப்பட்ட கேட்சுகளில் தலைசிறந்த கேட்ச் இதுவாகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது!