வீடியோ.. மோதிய பங்களாதேஷ் ஏ வீரர்கள்.. சிறப்பான சம்பவம் செய்த இந்திய இளைஞர்கள்!

0
741
India A

நேற்று எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஏ அணியும் பங்களாதேஷ் ஏ அணியும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதிக்கொண்ட போட்டி இலங்கையில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழலை, இந்திய இளம் வீரர்கள் கொஞ்சம் கணிக்க தவறிவிட்டனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய வீரர்கள் அதிரடியில் ஈடுபட விக்கட்டுகளை வேகமாக இழந்து கொண்டே வந்து விட்டார்கள். இதன் காரணமாக இந்திய அணியால் ஐம்பதாவது ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்திய அணியின் தரப்பில் மிகவும் பொறுப்பாக விளையாடிய கேப்டன் யாஷ் துல் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். இல்லையென்றால் இந்திய அணியின் நிலைமை மிகவும் மோசமாக மாறி இருக்கும்.

இந்திய அணி கொஞ்சம் சூழலை கணிக்க தவறி விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருக்க, இன்னொரு பக்கம் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மிகவும் வெறுப்பேற்றும் வகையில் இருந்தது. அவர்கள் இந்திய வீரர்களை வெளியேற்றியதும் அதை கொண்டாடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது. ரியான் பராக் வெளியேறிய போது தன்சின் ஹசன் சாகிப் மோசமாக செயல்பட்டார். ஆனாலும் இந்திய வீரர்கள் அமைதியாகவே வெளியேறினார்கள். இது எல்லா நிலையிலும் தொடர்ந்தது.

- Advertisement -

இதனையில் குறைந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 70 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தது. முதல் விக்கட்டை 70 ரன்னில் மானவ் சுதார் கைப்பற்றியதும் அங்கிருந்து பங்களாதேஷ் அணியின் சரிவு ஆரம்பித்தது.

இங்கிருந்து இந்திய வீரர்கள் பங்களாதேஷ் வீரர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள். 26 ஆவது ஓவரை யுவராஜ் சிங் டோடியா வீச, அதில் சௌமியா சர்க்கார் ஆட்டம் இழந்தார். அப்பொழுது களத்தில் அருகில் நின்ற இளம் இந்திய வீரர் ராணா ஆக்ரோஷமாக கொண்டாட முட்டிக்கொண்டது. அவர்கள் செய்ததற்கு திருப்பி ராணா பதிலடி கொடுத்து வழி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சாய் சுதர்சன் இடையில் சமாதானம் செய்தார்.

இதேபோல் தன்னை வெளியேற்றி வார்த்தைகளை விட்டதற்கு ரியான் பராக் ஒரு அட்டகாசமான கேட்ச் பிடித்து தன்னுடைய சிரிப்பின் மூலமாகவே பங்களாதேஷ் வீரர்களை எக்கச்சக்கமாக வெறுப்பேற்றிய அனுப்பி வைத்தார். இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 160 ரண்களுக்கு சுருட்டி பாகிஸ்தான அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது.