வீடியோ.. 14பவுண்டரி 7சிக்ஸர்.. ரெய்னா டீம் டிவேன் ஸ்மித் மிரட்டல் அடி சதம்.. லெஜன்ட்ஸ் லீக் 2023!

0
391
Raina

இந்தியாவில் தற்பொழுது ஓய்வு பெற்ற வீரர்களை வைத்து லெஜெண்ட்ஸ் லீக் என்ற பெயரில் டி20 லீக் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாக நடைபெறும் இந்தத் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இந்தியாவில் இருக்கிறது.

இந்தியா கேப்பிட்டல்ஸ், பில்வாரா கிங்ஸ், மணிப்பால் டைகர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சவுதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

- Advertisement -

நேற்று சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், முகமத் கைப் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் நடைபெற்றது. இதில் முகமது கைஃப் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் துவக்க வீரராக சில காலம் விளையாடி வந்த டிவோன் ஸ்மித், இந்த முறையும் சுரேஷ் ரெய்னா அணியான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரராக வந்து, தனது பழைய அதிரடியில் பேட்டிங்கில் மிரட்டி விட்டார்.

டிவோன் ஸ்மித் 53 பந்துகளை மட்டுமே சந்தித்து 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் குவித்து மிரட்டினார். ஆர். கிளார்க் 34, குர்கிரத் சிங் 39, அஸ்கர் ஆப்கான் 29 என அதிரடியாக ரன்கள் எடுக்க, அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில், ஆறு விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து அசத்தியது.

- Advertisement -

முகமது கைப் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் பங்கஜ் சிங் மற்றும் இலங்கையின் திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து களமிறங்கி மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மணிப்பால் டைகர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 75 ரன்கள் வித்தியாசத்தில் சுரேஷ் ரெய்னாவின் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

மணிப்பால் டைகர் அணிக்கு அஞ்சலோ பெரேரா மற்றும் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித்தரப்பில் ஜெரோம் டைலர் மற்றும் பீட்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.