வீடியோ.. 110ரன் டார்கெட்.. 53ரன் 10விக்கெட்.. கர்நாடகா குஜராத் திரில் போட்டியில் எதிர்பாராத முடிவு

0
190
Ranji

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியின் 2024-25 சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எலிட் பிரிவில் மொத்தம் 32 அணிகளும், பிளேட் பிரிவில் 6 அணிகளும் இடம்பெற்று இருக்கின்றன.

கடந்த வாரத்தில் துவங்கிய ரஞ்சி தொடரில் எல்லா அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்டன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அனைத்து அணிகளுக்கும் இரண்டாவது போட்டி தொடங்கியது.

- Advertisement -

இதில் ஒரு போட்டியாக குஜராத் மற்றும் கர்நாடக அணிகள் மோதிக்கொண்ட போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 264 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய கர்நாடக அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் 109 ரன்கள், 88 ரன்கள் எடுக்க, கர்நாடக அணி 374 ரன்கள் குவித்து 110 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய குஜராத் அணி மீண்டும் 219 ரன்களில் சுருண்டது. இதனால் கர்நாடக அணிக்கு 110 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த குறிப்பிட்ட போட்டியில் எல்லா நேரங்களிலும் ஆதிக்கம் செலுத்திய அணியாக கர்நாடக அணியே இருந்தது. எனவே இந்த போட்டியில் இந்த குறைந்த இலக்கை எட்டி கர்நாடக அணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் படிக்கல் 19, மயங்க் அகர்வால் 31 என மொத்தம் 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்கள். மேற்கொண்டு 60 ரன்களை மற்ற விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி எளிதான நிலை காணப்பட்டது.

ஆனால் மனம் தளராத குஜராத் அணி அபாரமான தாக்குதலை கொடுத்தது. குறிப்பாக அந்த அணியின் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் சித்தார்த் தேசாய் பந்துவீச்சில் கலக்கினார். 13 ஓவர்களில் 42 ரன்கள் தந்து ஏழு விக்கெட் கைப்பற்றி, கர்நாடக அணியை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்தார்.

முதல் 50 ரன்கள் ஒரு விக்கெட் கூட இழக்காத கர்நாடக அணி, அடுத்து 53 ரன்கள்மட்டுமே எடுத்து, 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து, 6 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த திரில் போட்டியில் குஜராத் கடைசியில் வெற்றி பெற்றது.