தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் கேரள அணிக்கு எதிராக விதர்பா அணி மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது. கருண் நாயர் சதத்தின் மூலமாக ரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றுவதற்கு மிக அருகில் இருக்கிறது.
2024-25 ரஞ்சி டிராபி தொடருக்கான இறுதிப் போட்டிக்கு விதர்பா மற்றும் கேரள அணிகள் தகுதி பெற்றன. இந்த இறுதி போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற கேரளா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்த விதர்பா அணி பின்பு சுதாரித்து ரன்கள் குவிக்க ஆரம்பித்தது.
விதர்பா அணியை மீட்ட பார்ட்னர்ஷிப்
இதைத் தொடர்ந்து விதர்பா அணிக்கு சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார். இவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மலேவர் 153 ரன்கள் எடுத்தார். விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்கள் குவித்தது. கேரள அணியின் தரப்பில் நிதிஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து விளையாடிய கேரளா அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 342 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி முதல் இன்னிங்ஸ் முன்னிலையை தவறவிட்டது. கேரள அணிக்கு சர்வேட் 79, கேப்டன் சச்சின் பேபி 98 ரன்கள் எடுத்தார்கள். விதர்பா அணியின் பந்துவீச்சில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஸ் துபே மற்றும் பர்த் ரெகாடே தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
கருண் நாயர் நான்காவது சதம்
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணிக்கு மீண்டும் சிறப்பாக விளையாடிய டேனிஷ் மலேவர் 73 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய கருண் நாயர் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 132 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்று நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து, 286 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. நாளை ஐந்தாவது நாளில் இன்னும் நூறு ரன்கள் எடுத்தால், போட்டி டிராவில் முடிவடையும். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் விதர்பா அணி ரஞ்சி தொடரை வெல்லும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது!
இதையும் படிங்க: இந்தியா ஆஸி பைனல் வருவாங்க.. ஆனா அங்க 1 ரன் வித்தியாசத்தில் இது நடக்கப்போகுது – மைக்கேல் கிளார்க் கணிப்பு
இந்த போட்டியில் சதம் அடித்த கரும் நாயர் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஒன்பது விரல்களை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது விஜய் ஹசாரே டிராபியில் 5 சதங்கள், தற்போது ரஞ்சி டிராபியில் 4 சதங்கள் என மொத்தம் ஒன்பது சதங்கள் அடித்திருக்கிறேன் என தேர்வுக் குழுவுக்கு சிக்னல் செய்திருக்கிறார். மேற்கொண்டு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும்.